எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கூறியதை செய்வாரா முதல்வர் ஸ்டாலின் ? : பா.ஜ., எச்.ராஜா கேள்வி| Dinamalar

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கூறியதை செய்வாரா முதல்வர் ஸ்டாலின் ? : பா.ஜ., எச்.ராஜா கேள்வி

Added : நவ 29, 2021 | |
மதுரை : ''பருவமழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கூறியதை தற்போது முதல்வராகவுள்ள ஸ்டாலின் செய்வாரா,'' என, மதுரையில் பா.ஜ., பயிற்சி முகாமில் பங்கேற்ற தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.அவர் மேலும் கூறியதாவது:ஆண்டுக்கு ஒரு முறை வெள்ளம் வந்த நிலை மாறி சென்னையில்



மதுரை : ''பருவமழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கூறியதை தற்போது முதல்வராகவுள்ள ஸ்டாலின் செய்வாரா,'' என, மதுரையில் பா.ஜ., பயிற்சி முகாமில் பங்கேற்ற தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.



அவர் மேலும் கூறியதாவது:

ஆண்டுக்கு ஒரு முறை வெள்ளம் வந்த நிலை மாறி சென்னையில் இந்தாண்டு 2 வது முறையாக வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தத்தளிக்கின்றனர். பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் போய் சேரவில்லை. ஆனால் தமிழக அரசுக்கு அதை பற்றி கவலையில்லை. முந்தைய அ.தி.மு.க., அரசை குறை சொல்லி பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறது.

1967 க்கு பிறகு வந்த திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியதன் விளைவை தற்போதைய தமிழகம் சந்தித்து கொண்டிருக்கிறது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே ஜாதிக்கலவரம், வன்முறைகள் அரங்கேறும். போலீசாருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என மக்கள் அறிவர். போலீஸ் எஸ்.எஸ்.ஐ., ஒருவர் ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். பஸ் கண்டக்டரை வெட்டுகின்றனர்.

இந்த ஆட்சி வந்ததிலிருந்து முதல்வரும், அமைச்சர் சேகர்பாபுவும் கோயில் நகைகளை எடுத்து அடகு வைப்பதிலேயே அக்கறை காட்டி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுாரில் பெரியகோயில் உள்ளிட்ட பல கோயில்கள் இடிக்கப்படுகின்றன. ஹிந்துகளுக்கு எதிராக யுத்தம் அறிவித்துள்ள ஹிந்து விரோத அரசை பா.ஜ., கண்டிக்கிறது, என்றார்.

நகர் தலைவர் சரவணன், நிர்வாகி சிவபிரபாகரன் உடனிருந்தனர்.



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X