பிரதமர் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் நம் துாத்துக்குடியை பற்றி பேசியிருக்கிறார். துாத்துக்குடி கடற்கரையில், எவ்வாறு பனைமரம் இயற்கை சீற்றத்திலிருந்து கடற்கரையையும், சிறு தீவுகளையும் பாதுகாக்கிறது என்று குறிப்பிட்டிருக்கின்றார். பிரதமர் குறிப்பிடக்கூடிய இந்த அற்புதமான விஷயத்தை, சில நாட்களுக்கு முன்பு நடந்த இயற்கை சீற்றத்தில் துாத்துக்குடி கரையோரத்தில் பனை மரத்தினுடைய மகத்துவத்தை பார்த்தோம். இந்தப் பகுதியின் மக்கள் பெருமளவு பனை கொட்டைகளை கடலோரத்தில் பதித்து வருகிறார்கள்.- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்
எது உண்மை ?
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கோரியே கவர்னருடனான சந்திப்பு நடந்ததாக முதல்வர் தரப்பு தெரிவிக்க, கொரோனா குறித்து விவாதித்ததாக கவர்னர் மாளிகை கூறியிருக்கிறது. அப்படி என்றால் உண்மை என்ன. 'ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்து விடுவோம்' என்று தேர்தலுக்கு முன் ஏமாற்று வசனம் பேசிய தி.மு.க., அதனை செய்ய முடியாததால், இப்போது தமது வழக்கப்படி நாடகமாடுகிறதா.- தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்
எஸ்.சி.,- எஸ்.டி., மற்றும் கிறித்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கான படிப்பு உதவித் தொகைக்கு வருமான வரம்பை உயர்த்த வேண்டும் என்று வி.சி.க., சார்பில் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வருமான வரம்பை உயர்த்தியுள்ள முதல்வருக்கு நன்றி.- திருமாவளவன், வி.சி.க., தலைவர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE