அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை மேயர் வேட்பாளர் கனிமொழி?

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (81)
Share
Advertisement
சென்னை மாநகராட்சி தேர்தலில் கனிமொழியை மேயர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.சென்னை மாநகராட்சியில் உள்ள இருநுாறு (200) வார்டுகளில், நுாற்றியொரு (101) வார்டு பெண் வார்டுகளாக மாற்ற்றப்பட்டுள்ளது. ஆண் வார்டுகளை விட பெண் வார்டு கூடுதலாக அமைந்துள்ளதால், சென்னை மேயர் பதவிக்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது.இதுவரை

சென்னை மாநகராட்சி தேர்தலில் கனிமொழியை மேயர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.



latest tamil news



சென்னை மாநகராட்சியில் உள்ள இருநுாறு (200) வார்டுகளில், நுாற்றியொரு (101) வார்டு பெண் வார்டுகளாக மாற்ற்றப்பட்டுள்ளது. ஆண் வார்டுகளை விட பெண் வார்டு கூடுதலாக அமைந்துள்ளதால், சென்னை மேயர் பதவிக்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது.இதுவரை சென்னை மேயர் வரலாற்றில் பெண் மேயர் இடம் பெறவில்லை.கடந்த 1996ம் ஆண்டில், சென்னை மேயராக முதல்வர் ஸ்டாலின் முதல் முறையாக பொறுப்பு வகித்த போது, துணை மேயர் பதவி தலித் சமுதாய பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டது.

தற்போது சென்னை மாநகராட்சிக்கு பெண் மேயர் பொறுப்பேற்றதில்லை என்ற குறையை போக்குவதற்கும், பெண்களுக்கு இடஒதுக்கீட்டில் சம உரிமை தி.மு.க., வழங்குகிறது என்பதை பறை சாற்றவும் இந்த முறை பெண் மேயர் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பில், சென்னை பெண் மேயர் என இடம் பெற்றால், தி.மு.க., சார்பி்ல் யார் வேட்பாளர் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியில் உருவாகி உள்ளது.


latest tamil news



தி,மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழியை, சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட வைக்க வேண்டும் என, மகளிர் அணி நிர்வாகிகள் விரும்புகின்றனர்.சமீபத்தில் சென்னை மழை வௌ்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிவராண பணிகளில் தீவிரம் காட்டியது போல கனிமொழியும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.
துாத்துக்குடி தொகுதியில் முகாமிட்டு, அங்கு மழை வௌ்ளம் அடைத்துள்ள கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளிலும், நிவாரண பணிகள் மற்றும் மீட்பு நவடிக்கைகளில் கனிமொழி ஈடுப்பட்டுள்ளா். மேலும், சென்னையில் மழைநீர் வௌ்ளம் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என, கனிமொழி உறுதி அளித்துள்ளார்.அவர் மேயராகும் வாய்ப்பு முதல்வர் ஸ்டாலின் வழங்கினால், கனிமொழி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, தி.மு.க., ஆட்சிக்கு பெருமையும் சேர்ப்பார் என, மகளிர் அணியினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-நவ-202106:11:31 IST Report Abuse
அக்கப்போர் கனிமொழி நல்ல சாய்ஸ். ஆனால், சென்னை அப்படியேதான் இருக்கும். தூத்துகுடி மாறிவிட்டதா என்ன? சுப்ரியா சுலேவுக்கு ஒரு நண்பி குறைந்து விடும். அவ்வளவே.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
30-நவ-202103:58:25 IST Report Abuse
meenakshisundaram கனி மொழி மேயர் ?கண்டிப்பா நீர் சூழ்ந்த சென்னையை மீட்பார் .எல்லா வீட்டுக்கும் 'குடம் 'கொடுத்து தேங்கிய நீரை பிடித்து வைத்துக்கொள்ள சொல்லி .
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
30-நவ-202103:24:27 IST Report Abuse
BASKAR TETCHANA நம்பி மேயர் பதவி கொடுக்க போகின்றனர். அவருக்கு மக்களை பற்றி கவலை இல்லை. ஆனால் எனக்கு ஒரு கவலை. அந்த மேயருக்கு ஒரு சங்கிலி போடுவார்கள் அதை கண்மூடி கண் திறப்பதற்குள் அதை அப்படியே பித்தளையாக மாற்றி விடுவார் கை தேர்ந்தவர் ஜாக்கிரதை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X