பொது செய்தி

இந்தியா

போட்டிப்போட்டு கட்டணத்தை உயர்த்தும் மொபைல் போன் நிறுவனங்கள்; ஜியோ கட்டணமும் உயர்வு

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: பார்தி ஏர்டெல், வோடபோன் -ஐடியா ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து தற்போது ஜியோவும் தனது கட்டணத்தை உயர்த்தியுள்ளது.நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் தனது பிரீபெய்டு திட்டங்களின் விலையை 20 முதல் 25 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியது. நவம்பர் 26ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் 20 முதல்
Jio, Raises, Prepaid Rates, Airtel, Vodafone Idea, ஜியோ, பிரீபெய்டு, கட்டணம், உயர்வு, ஏர்டெல், வோடபோன் ஐடியா

புதுடில்லி: பார்தி ஏர்டெல், வோடபோன் -ஐடியா ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து தற்போது ஜியோவும் தனது கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் தனது பிரீபெய்டு திட்டங்களின் விலையை 20 முதல் 25 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியது. நவம்பர் 26ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் 20 முதல் 25 சதவீதம் அளவிற்கு பிரீபெய்டு கட்டணங்களை உயர்த்தியது. இந்நிறுவனங்களின் 28 நாட்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 79 ரூபாயில் இருந்து, 99 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல், 'அன்லிமிடெட்' அழைப்புகள் குறித்த திட்டங்களிலும் 20 முதல் 23 சதவீதம் அளவுக்கு கட்டணம் அதிகரித்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், ஏர்டெல், வோடபோன் -ஐடியா ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து தற்போது ஜியோவும் தனது கட்டணத்தை உயர்த்தியுள்ளது. எனினும் மற்ற இரு நிறுவனங்களின் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் ஜியோவின் கட்டணம் குறைவாகவே உள்ளது. ஜியோ போன்களில் குறைந்தபட்ச கட்டணமாக இருந்த ரூ.75 திட்டம் ரூ.91 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 'அன்லிமிடெட்' திட்டங்களில் குறைந்தபட்ச கட்டணமான ரூ.129 (28 நாட்கள்) என்பது ரூ.155 ஆக அதிகரித்துள்ளது. ஜியோவின் கட்டண உயர்வு டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலாகிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
29-நவ-202122:19:37 IST Report Abuse
J.Isaac மதுவுக்கு ஒரு கூட்டம் அடிமையாய் இருப்பது போல், மொபைலுக்கு பெரிய கூட்டம் அடிமையாகி உள்ளது. பெட்ரோல் டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுவது போல் இந்த கட்டணம் உயர்த்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் பிஎஸ்என்எல் கதையை முடித்தாயிற்று
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
29-நவ-202120:15:57 IST Report Abuse
amuthan சும்மா வீட்டில் சிவனே என்று படுத்திருந்த மக்களை வங்கிகளில் கணக்கு திறக்க சொல்லி கடைசியில் இருந்து பணத்தையும் புடுங்கியாச்சி அடுத்தது மொபைல் போன் லாலு பிரசாத் அன்றே கூறினார் மக்களுக்கு தேவை டேட்டா இல்லை ஆட்டா. இப்போது ஆட்டா விலையும் அதிகம். டேட்டா விலையும் அதிகம். ஏழை மக்கள் கையில் பணம் வந்து விட கூடாது என்பதில் அரசு மிகவும் அக்கறை காட்டி வருகின்றனர்
Rate this:
Cancel
Venkat Subbarao - Chennai,இந்தியா
29-நவ-202120:12:03 IST Report Abuse
Venkat Subbarao பைத்தியக்காரத்தனம் பொது மக்களை வாட்டுவதற்காகவே இதுபோல் செய்வது.காஸ் மீதான மான்யம் ரத்து முதியோர் ரெயில்வே பயணங்களுக்கு அளித்த சலுகை ரத்து ஏழைகள் என்ன செய்வார்கள் ? அதே போல் கேபிள் ட்ராய் ரூபாய் 150 பிரீ காம்ப்ளிமெண்டரி பீஸ் அனுமதி என்ன று தீட்டம் என்று தெரியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X