பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்த நாளில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கனமழைக்கு எச்சரிக்கை

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் நவ.,30ம் தேதி, அரபிக்கடலில் டிச.,1ம் தேதி என இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் அடுத்த நாளில் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவ.,30) உருவாகும் என ஏற்கனவே
Heavy Rain, IMD, Warns, Tamilnadu, Rain, வானிலை ஆய்வு மையம், கனமழை, எச்சரிக்கை, தமிழகம்,

சென்னை: வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் நவ.,30ம் தேதி, அரபிக்கடலில் டிச.,1ம் தேதி என இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் அடுத்த நாளில் உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவ.,30) உருவாகும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிச.,1-ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (நவ.,29) விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட கடலோர மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


வங்க கடலில் நாளையும், அரபிக்கடலில் நாளை மறுநாளும் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக உள்ளன. இந்நிலையில், டிசம்பர் 1 வரை தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

latest tamil news




மழை குறையும்:


தமிழகத்தில் நாளை முதல் மழை குறையத் துவங்கும். வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
நவ.,30: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
டிச.,01: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news


சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணிநேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணிநேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 17 செ.மீ., சிவலோகம் (கன்னியாகுமரி) 16 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:



வங்க கடல் பகுதிகள்:


நவ.,29: குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
நவ.,30: தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து 48 மணிநேரத்திற்கு மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன்காரணமாக, தெற்கு அந்தமான் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.


அரபிக்கடல் பகுதிகள்:


நவ.,29: தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
29-நவ-202119:15:57 IST Report Abuse
sundarsvpr புரியாத புதிர். ஆண்டுதோறும் பயமுறுத்தல் வருகிறது. பாதிப்பு கடுமையாய் ஏற்படுகின்றன. பாதிப்பை சரிசெய்திட தொகை செலவு செய்கிறது. இது தொடர்கதையாய் உள்ளது. நிவாரண நிதி தலைமை அமைச்சர் வழங்குவது மட்டும் ஊடகங்களில் காண்பிக்கப்படுகின்றன. இதர அமைச்சர்கள் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியவில்லை. மர்ம கதைபோல் நிலவரம் உள்ளது. புயல் இல்லாததால் உயிர் சேதம் குறைவு.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
29-நவ-202117:22:47 IST Report Abuse
Sampath Kumar அது என்ன வென்று தெரியல தீ மு கா ஆட்சிக்கு வந்தலை மலை பிடிக்குது ஒருவேளை நாலவங்க அங்கே அதிகம் உள்ளார்களா ஹி ஹி
Rate this:
Cancel
Viswanathan - tamilnadu,இந்தியா
29-நவ-202115:47:10 IST Report Abuse
Viswanathan ஐயா. என் பெயர் விஸ்வநாதன் குணமங்கலம் ஊராட்சி. உளுந்தூர்பேட்டை ஒன்றியம். நான் எந்த ஊரில் 35ஆண்டுகளாக வசித்து வருகிறேன் நான் வளர்ந்த நாள் முதல் இந்த ஏரி வாய்க்கால் பயன்படுத்தி பலர் விவசாயம் செய்து வந்தனர் இப்போது ஏரி வாய்க்கால் மரித்து அதன்மீது கடை கட்டி வணிகம் நடத்துகிறார்கள். இதனை அகற்ற தருமாறு சீர் செய்து தருமாறு உங்களிடம் மனு கொடுத்துள்ளோம் இதுநாள்வரை அவனுக்கு எந்த விடிவும் தெரியவில்லை ஆகையால் மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X