சரக்கு வாகனம் மோதி பிளஸ் 2 மாணவி சாவு

Added : நவ 29, 2021 | |
Advertisement
கிருஷ்ணகிரி: மேட்டுபாளையம் அருகே, சரக்கு வாகனம் மோதி பிளஸ் 2 மாணவி பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் மகள் சத்யா, 16; பிளஸ் 2 படித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் மேட்டு பாளையம் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த மாணவியை

கிருஷ்ணகிரி: மேட்டுபாளையம் அருகே, சரக்கு வாகனம் மோதி பிளஸ் 2 மாணவி பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் மகள் சத்யா, 16; பிளஸ் 2 படித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் மேட்டு பாளையம் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று காலை இறந்தார். இதையடுத்து சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர். மாணவி சத்யா இருளர் இனத்தை சேர்ந்தவர். மேட்டுப்பாளையம் கிராமத்திலுள்ள இருளர் இன மக்களில் சத்யாதான், முதல் முறையாக பிளஸ் 2 வரை படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X