முதியவரை மீட்ட அதிகாரி

Added : நவ 29, 2021 | |
Advertisement
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால், மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றங்கரையோரத்தில் உள்ள அரசநிலையிட்டபுரம் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. தகவலறிந்து வந்த டி.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், 48, பொதுமக்களை டிராக்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றார். கால்நடைகள் ஏதும் வெள்ளத்தில் சிக்கி உள்ளதா என பார்ப்பதற்காக, மீண்டும்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால், மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றங்கரையோரத்தில் உள்ள அரசநிலையிட்டபுரம் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. தகவலறிந்து வந்த டி.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், 48, பொதுமக்களை டிராக்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றார். கால்நடைகள் ஏதும் வெள்ளத்தில் சிக்கி உள்ளதா என பார்ப்பதற்காக, மீண்டும் வெள்ளம் சூழ்ந்த பகுதிக்கு சென்றார். அப்போது, நடக்க முடியாத நிலையில் இருந்த சிவஞானம், 85 என்ற முதியவர், கட்டிலில் படுத்த படுக்கையாக இருந்ததை கண்டார். அவரிடம் விசாரித்தபோது, தனக்கு சில ஆண்டுகளுக்கு முன் கால் செயலிழந்து விட்டதாகவும், தன் குடும்பத்தினர் புளிசாதம் செய்து அருகில் வைத்துவிட்டு, பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாகவும் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ், அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மூவருடன் சேர்ந்து முதியவரை கட்டிலில் வைத்து தூக்கி வந்து, அம்பாப்பூர் பள்ளியில் தங்க வைத்தார். இந்த படம் சமூக வலைதளங்களில் பரவி, ஜெயராஜுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X