திருச்சி: ''மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், பாடத்திட்டம் குறைக்கப்படாது,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி: பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், பாடத் திட்டங்கள் குறைக்கப்படாது. கூடுதல் வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் புதுப்பிக்கப்படுவது வழக்கமான நடைமுறை. அந்த நடைமுறையே தொடரும். இவ்வாறு, அவர் கூறினார்.
திட்டியது தவறு: சில நாட்களுக்கு முன், திருவெறும்பூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் மகேஷ் பார்வையிட்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த வயதான விவசாயியை போய்யா என்று திட்டினார். இது குறித்து, நேற்று அமைச்சர் மகேஷ் கூறுகையில், ''அந்த விவசாயி, தன் வயலை தனிப்பட்ட முறையில் பார்வையிட அழைத்தார். அதனால், அப்படி பேசி விட்டேன். அப்படி பேசி இருக்கக்கூடாது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE