அரியாறு கரை உடைப்பு: போக்குவரத்து பாதிப்பு

Added : நவ 29, 2021 | |
Advertisement
திருச்சி: திருச்சி அருகே அரியாற்றில் கரை உடைப்பால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், புங்கனூரில் அரியாற்றில் தொடர் மழையால் இரு கரைகளை தொட்டபடி தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. நேற்று மதியம், புங்கனூரில் அரியாற்றில் கரையில் உடைப்பு ஏற்பட்டு, ஆற்று நீர், பிராட்டியூர் வழியாக, கோரையாறுக்கு சென்றது. இதனால் தீரன்நகர் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருச்சி: திருச்சி அருகே அரியாற்றில் கரை உடைப்பால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், புங்கனூரில் அரியாற்றில் தொடர் மழையால் இரு கரைகளை தொட்டபடி தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. நேற்று மதியம், புங்கனூரில் அரியாற்றில் கரையில் உடைப்பு ஏற்பட்டு, ஆற்று நீர், பிராட்டியூர் வழியாக, கோரையாறுக்கு சென்றது. இதனால் தீரன்நகர் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் திருச்சி-திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. திருச்சி மாநகரில் கடந்த, இரு நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இப்படியாக செல்வம் நகர், லிங்கம் நகர், தீரன் நகர், கருமண்டபம், எடமலைப்பட்டிபுதூர், தேசிய கல்லூரி பகுதி, காவேரி நகர், பிராட்டியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால், தொடர்ந்து மழை பெய்ததால், வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X