அரூர்: ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட சென்ற, மேலும் ஒரு தொழிலாளி தலை துண்டான நிலையில் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி மலை பஞ்., மிதிகாடுவை சேர்ந்தவர் ராமன், 42. இவர் கடந்த, 21ல் கோவைக்கு கூலி வேலைக்கு செல்வதாக, அவரது மனைவி உண்ணாமலையிடம் கூறிவிட்டு, அதே ஊரை சேர்ந்த பழனி, முருகன், மாதையன் ஆகியோருடன் செம்மரம் வெட்ட ஆந்திரா சென்றுள்ளார். அவர்களில் நான்கு பேரை வனத்துறையினர் பிடித்தனர். நேற்று முன்தினம் சித்தேரி பஸ் நிறுத்தம் அருகே தலையில் காயத்துடன் ராமன் இறந்து கிடந்தார். இந்நிலையில், சித்தேரி அழகூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஆந்திரா மாநிலம், கடப்பாவில் தலை துண்டான நிலையில் இறந்துள்ளதாகவும், அவரது உடலை கொண்டு வர உதவி செய்யுமாறும், அரூர் போலீசாரிடம் நேற்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஒருவர் காயங்களுடன் சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிருஷ்ணகிரியிலிருந்து, ராமனின் உடலை சித்தேரிக்கு காரில் கொண்டு வந்தது தொடர்பாக, அரூரை சேர்ந்த கார் உரிமையாளர் சண்முகம், ஓட்டுனர் பார்த்திபன் ஆகியோரிடம், நேற்று முன்தினம் எஸ்.பி.,கலைச்செல்வன் விசாரணை நடத்தினார். நேற்று அவர்களிடம், செம்மர கடத்தல் புரோக்கர்கள் குறித்து, தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE