'அழகான பெண் எம்.பி.,க்கள்': வர்ணித்துவிட்டு வாபஸ் வாங்கிய சசிதரூர்

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (63)
Share
Advertisement
புதுடில்லி: லோக்சபாவில் 6 பெண் எம்.பி.,க்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவர்களை வர்ணித்து பதிவிட்ட காங்கிரஸ் எம்.பி., சசிதரூர், பின்னர் மனம் புண்பட்டிருப்பதற்கு வருந்துவதாக கூறியுள்ளார்.காங்கிரஸ் மூத்த எம்.பி.,யான சசிதரூர், இன்று (நவ.,29) துவங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றார். கூட்டத்தொடருக்கு முன்னதாக 6 பெண் எம்.பி.,க்களுடன் அவர் எடுத்துக்கொண்ட
Shashi Tharoor, MPs, Attractive Place, Viral Photo, சசி தரூர், எம்பிக்கள், பெண், வர்ணிப்பு, லோக்சபா, புகைப்படம்

புதுடில்லி: லோக்சபாவில் 6 பெண் எம்.பி.,க்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவர்களை வர்ணித்து பதிவிட்ட காங்கிரஸ் எம்.பி., சசிதரூர், பின்னர் மனம் புண்பட்டிருப்பதற்கு வருந்துவதாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த எம்.பி.,யான சசிதரூர், இன்று (நவ.,29) துவங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றார். கூட்டத்தொடருக்கு முன்னதாக 6 பெண் எம்.பி.,க்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சர்ச்சையானது. 'லோக்சபா, பணி செய்தற்கு அழகான இடம் இல்லை என யார் சொன்னது? இன்று காலை எனது சக எம்.பி.க்கள் ஆறு பேருடன் நான்,' எனக் குறிப்பிட்டு தமிழகத்தை சேர்ந்த காங்., எம்.பி., ஜோதிமணி, திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட 6 பெண் எம்.பி.,க்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இது பல தரப்பிலும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.


latest tamil news


இதனையடுத்து தனது பதிவிற்கு அவர் வருந்துவதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'இந்த முழு செல்பியும் பெண் எம்.பி.,க்களால் நல்ல நகைச்சுவையுடன் எடுக்கப்பட்டது. அதே உணர்வில் அதை பதிவிடுமாறு அவர்கள்தான் என்னிடம் கூறினர். சிலர் மனம் புண்பட்டிருப்பதற்கு வருந்துகிறேன். ' எனக் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Honda -  ( Posted via: Dinamalar Android App )
30-நவ-202107:58:48 IST Report Abuse
Honda ஏற்கனவே கொலைகாரன் அடுத்ததை தேடுகிறான்
Rate this:
Cancel
Honda -  ( Posted via: Dinamalar Android App )
30-நவ-202107:58:48 IST Report Abuse
Honda ஏற்கனவே கொலைகாரன்...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-நவ-202104:11:25 IST Report Abuse
Natarajan Ramanathan அழகான 6 பெண் எம்பிக்கள் என்று சொல்லி பிறகு சோதிமணியும் அதில் இருந்ததை பார்த்து வாபஸ் வாங்கி விட்டார்....அவர் செய்தது சரிதான்.
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
30-நவ-202112:18:21 IST Report Abuse
Barakat Aliஉமக்கு ரசனையே இல்லைங்காணும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X