பொது செய்தி

இந்தியா

நம்பிக்கையான சமூகத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., முயற்சி: மோகன் பகவத்

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
குவாலியர்: ‛‛நம்பிக்கையான சமூகத்தை உருவாக்கவே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு முயன்று வருகிறது,'' என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில், இசைக் கருவிகளின் சங்கம விழா கடந்த 4 நாட்களாக நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசியதாவது: ஆர்.எஸ்.எஸ்.,
RSS, Attempt, Create, community, trust, Leader, Mohan Bhagwat, நம்பிக்கை, சமூகம், உருவாக்குதல், ஆர்எஸ்எஸ், முயற்சி,  தலைவர் மோகன் பகவத், பேச்சு,

குவாலியர்: ‛‛நம்பிக்கையான சமூகத்தை உருவாக்கவே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு முயன்று வருகிறது,'' என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில், இசைக் கருவிகளின் சங்கம விழா கடந்த 4 நாட்களாக நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசியதாவது: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு அனைத்து இந்திய இசைப் பள்ளி கிடையாது. தற்காப்புக் கலைகளும் கற்றுத் தரப்படும். ஆனால், அதேசமயம், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு உடற்பயிற்சிக் கூடமோ அல்லது தற்காப்புக் கலை கற்பிக்கும் இடமோ அல்ல. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைத் துணை ராணுவப்படை என்று கூட அழைக்கலாம். ஆனால், அதற்காக அது ராணுவ அமைப்பு அல்ல. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு என்பது குடும்பச் சூழல் கொண்ட குழு.


latest tamil news


மேற்கத்திய நாடுகள் இசையைப் பொழுதுபோக்காகப் பார்க்கின்றன. இசை வாசிப்பது என்பது உற்சாகமாக அவர்களுக்கு இருக்கிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இசை என்பது ஆன்மாவிற்கானது. மனதை சாந்தப்படுத்தும், அமைதிப்படுத்தும் கலையாகும்.

கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நாம் சுதந்திரம் அடைந்தோம். ஆனால், அதற்கான போராட்டம் 1857ல் இருந்தே தொடங்கிவிட்டது. நம் சொந்த மண்ணிலேயே அந்நிய சக்தியிடம் தோற்றுவிட்டோம் என்ற எண்ணம் உருவானது. அப்போது தான் தவறுகளைச் சீர்செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. தொடர்ச்சியான அரசியல் மற்றும் சமூகச் சீர்திருத்தப் பணிகள் நடைபெற்றதால் சுதந்திரம் அடைந்தோம். தேசத்தைக் கட்டமைக்க அதிகமான முயற்சிகள் தேவைப்பட்டன.

தவறான நிர்வாகம், கொள்கையால் ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்ய 10 முதல் 20 ஆண்டுகள் தேவை. அரசியல்வாதிகள், அரசு, காவல்துறையினர் மூலம் கொண்டுவரும் வரப்படும் மாற்றங்களுக்கு சமூகத்தில் ஆதரவு இல்லாவிட்டால் அது சில காலம் மட்டுமே நீடிக்கும். இந்த தேசம் மாற்றம் அடைவதற்கு மதிப்பு மிகுந்த சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டும். அந்த நம்பிக்கையான சமூகத்தை எழுப்ப உருவாக்கவே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு முயன்று வருகிறது. இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202105:32:15 IST Report Abuse
J.V. Iyer உண்மை..உண்மை.. உண்மையை சொன்னால் சிலருக்கு கோவம் வரத்தானே செய்யும்?
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
30-நவ-202100:39:50 IST Report Abuse
J. G. Muthuraj 15 ஆகஸ்ட் 1947 ல் இந்திய சுதந்திரம் அடைந்த வரலாற்றை RSS உரிமை கொண்டாடுதா, சார்?....இந்திய சுதந்திர வரலாற்றில் அப்படி ஒரு பகுதி இருப்பதாக தெரியவில்லையே....தேடி பார்க்கிறேன்....ஓன்று நிச்சயம்: 1857 ல் அரங்கேற்றப்பட்ட இரத்த களரி மிகுந்த சிப்பாய் கலகம் போன்று 1947 ல் நடக்கவில்லையே.....கிட்டத்தட்ட 6000 வெள்ளைக்காரர்கள், மதிப்பிட முடியாத இந்தியர் மரணங்கள் நிகழ்ந்தன.....1947 ல் கிடைத்த சுதந்திரம் அஹிம்சை புரட்சியினால் நடந்தது...ஜனநாயகம், மதசார்பின்மை, பார்லிமென்ட் ஆட்சிமுறை, அரசியல் சாசனம் இவைகள் தான் நாம் பெற்ற அறுவடைகள்.... நீங்கள் எதிர்பார்க்கும் தேசிய மாற்றம் என்ன/எப்படி?.... எந்தவிதமான புதிய கட்டமைப்பு?....யாருக்கு நம்பிக்கை ஊட்டும் சமுதாயம் அமைக்க பாடுபடுகிறீர்கள்? ....எதில் மீது நம்பிக்கை....என்றெல்லாம் சற்று விளக்கமாக கூறுங்கள்....
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
29-நவ-202123:52:49 IST Report Abuse
PRAKASH.P Oru aaniyum ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X