விவாதம் செய்ய அஞ்சும் மத்திய அரசு: ராகுல்

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி: பார்லிமென்டின் இரு அவைகளிலும் விவாதம் இன்றி வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு, 'மத்திய அரசு பார்லியில் விவாதம் நடத்த அஞ்சுகிறது,' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.இன்று (நவ.,29) துவங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் பார்லிமென்டின் இரு அவைகளிலும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான மசோதா தாக்கல்
Congress, Rahul, Farm Laws, Debate, Centre, Fear, Rahul Gandhi,

புதுடில்லி: பார்லிமென்டின் இரு அவைகளிலும் விவாதம் இன்றி வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு, 'மத்திய அரசு பார்லியில் விவாதம் நடத்த அஞ்சுகிறது,' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.

இன்று (நவ.,29) துவங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் பார்லிமென்டின் இரு அவைகளிலும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன. மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதில் விவாதம் தேவை என எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. விவாதம் இல்லாமல் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேறியது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதாவது: வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முன்பே கூறியிருந்தோம், தற்போது அந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


latest tamil news


பார்லி.,யில் விவாதிக்கப்படாமல் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக பார்லி.,யில் விவாதிக்க மத்திய அரசு அஞ்சுகிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய ஓராண்டு ஆனது ஏன்? 700 விவசாயிகள் உயிரிழப்பிற்கு பிறகு தான் வேளாண் சட்டங்களை ரத்து செய்யதிருக்க வேண்டுமா? விவசாயிகள் மரணம், வேளாண் சட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் ஏன் மன்னிப்பு கேட்கவில்லை? இந்த விவகாரத்தில் விவசாயிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய மக்களின் பலத்தை மத்திய அரசால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. வரவிருக்கும் சில மாநிலத் தேர்தல்களை மனதில் வைத்தே தற்போது சட்டங்களை ரத்து செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


போராட்டம்:


latest tamil news


கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னதாக காலையில் பார்லி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக காங்., தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்ட சில காங்கிரஸ் எம்.பி.,க்கள் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தொடர் துவங்கியதும் போராட்டத்தை முடித்துக்கொண்டு கூட்டத்தொடரில் கலந்துகொண்டனர்.


12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்:


ராஜ்யசபாவில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்தபோது இந்த விவகாரத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து டோலா சென் (திரிணமுல் காங்.,), பிரியங்கா சதுர்வேதி (சிவசேனா), அகிலேஷ் பிரசாத்சிங் (காங்.,), இளமாறம் கரீம் (மார்க்சிஸ்ட் கம்யூ.,), புலோ தேவி நேதம் (காங்.,), ரிபுன்போரா (காங்.,), பினாய் விஸ்வம் (இந்திய கம்யூ.,), ராஜாமணி படேல் (காங்.,), சாந்தா சேத்திரி (திரிணமுல் காங்.,), சையது நசீர் ஹூசைன் (காங்.,), சய்யா வர்மா (காங்.,), அனில் தேசாய் (சிவசேனா) ஆகிய 12 எம்.பி.,க்கள் ராஜ்யசபாவின் மாண்மை குலைக்கும் வகையிலும், அவை நடவடிக்கைகளை தடுத்ததாகவும் கூறி குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
30-நவ-202104:42:53 IST Report Abuse
Cheran Perumal குதிரை வலம் போனாலும் குற்றம் இவர்கள் சொல்படி இடம் போனாலும் குற்றம்.
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
29-நவ-202122:36:13 IST Report Abuse
Venkatakrishnan வாயில் மட்டுமே வடைகள் சுடும் மங்குனிக் கூட்டத்திற்கு விவாதம் செய்யும் அளவுக்கு அறிவும் இல்லை, துணிச்சலும் இல்லை.... இதுவரை மோடி ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பும் செய்ததில்லை என்பது இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு...
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
29-நவ-202122:09:44 IST Report Abuse
R. Vidya Sagar அறிவுக்கொழுந்து ரொம்ப விவாதத்துக்கு பாய்ண்ட்ஸ் எல்லாம் எடுத்து தயாராக வைத்திருந்தாராம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X