லண்டனில் வட்டமேஜை மாநாடு தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் ஒரே பிரதிநிதியாக காந்தி கலந்து கொண்டார். லண்டனில் வட்ட மேஜை மாநாடுகள் நடைபெறுவதற்கு முன்பாகவே வட்டமேஜை மாநாடுகளால் ஒரு பிரயோஜனமும் கிடையாது. வெறும் வாதங்களால் எந்த ஒரு காரியமும் சாதிக்கப்பட்டதாக சரித்திரம் கூறவில்லை. காரியங்களை சாதிப்பதற்கு ஒரேவழி சண்டைதான். போர் மூலமாகவே அரசியல் தீர்வை எட்ட முடியும்.
இந்தியத் தாய் தனது விடுதலைக்கு இரத்தம் சிந்த தயாராக இருக்கிறாள். சூழ்நிலை இப்படி இருக்கும்போது 35 கோடி இந்தியர்கள் தங்கள் ரத்தத்தை தர தயாராக இருக்கும் போது காந்தி பேச்சு வார்த்தை நடத்தி நாட்டிற்கு நன்மை தரும் முடிவு எதையும் எடுத்துவிட முடியாது' என்று கூறிவிட்டார். இருந்தபோதும் காந்திக்கு எதிரான எந்தவிதமான நடவடிக்கையும் அவர் ஈடுபடவில்லை. முதல் மாநாடு மட்டுமல்ல மூன்று முறை லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாடுகள் பெரும் தோல்வியிலேயே முடிந்தன.
(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநிலச் செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE