பொது செய்தி

இந்தியா

பா.ஜ., ஆளும் மாநிலங்களில் 90%-ஐ தாண்டிய தடுப்பூசி எண்ணிக்கை

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் பா.ஜ., ஆளும் பல மாநிலங்களில் 90 சதவீதத்திற்கு அதிகமானோருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் காங்., கூட்டணியில் ஆளும் மாநிலங்களில் ஒன்றில் கூட 90 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தவில்லை.கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் தடுப்பூசி
Govt Sources, Covid Vaccine, BJP Ruled States, Congress, Allies States, First Dose, Second Dose, கொரோனா தடுப்பூசி, கோவிட் தடுப்பூசி, மத்திய அரசு, பாஜக, பாஜ, காங்கிரஸ், மாநிலங்கள்,

புதுடில்லி: இந்தியாவில் பா.ஜ., ஆளும் பல மாநிலங்களில் 90 சதவீதத்திற்கு அதிகமானோருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மற்றும் காங்., கூட்டணியில் ஆளும் மாநிலங்களில் ஒன்றில் கூட 90 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தவில்லை.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, நாடு முழுவதும் இதுவரை 122.41 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலங்கள் வாரியாக முதல் மற்றும் 2ம் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் குறித்து மத்திய அரசு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 7 பா.ஜ., ஆளும் மாநிலங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 8 பா.ஜ., ஆளும் மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு 2வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றில்கூட 90 சதவீதத்தினருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை எனத் தெரியவந்துள்ளது.


latest tamil newsகாங்., அல்லது அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள்:


மாநிலம் - முதல் டோஸ் - 2வது டோஸ்
* ஜார்கண்ட் - 66.2 சதவீதம் - 30.8 சதவீதம்
* பஞ்சாப் - 72.5 சதவீதம் - 32.8 சதவீதம்
* தமிழகம் - 78.1 சதவீதம் - 42.65 சதவீதம்
* மஹாராஷ்டிரா - 80.11 சதவீதம் - 42.5 சதவீதம்
* சட்டீஸ்கர் - 83.2 சதவீதம்- 47.2 சதவீதம்
* ராஜஸ்தான் - 84.2 சதவீதம் - 46.9 சதவீதம்


latest tamil newsபா.ஜ., ஆளும் மாநிலங்கள்:


மாநிலம் - முதல் டோஸ் - 2வது டோஸ்
* ஹிமாச்சல் பிரதேசம் - 100 சதவீதம் - 91.9 சதவீதம்
* கோவா - 100 சதவீதம் - 87.9 சதவீதம்
* குஜராத் - 93.5 சதவீதம் - 70.3 சதவீதம்
* உத்தரகண்ட் - 93 சதவீதம் - 61.7 சதவீதம்
* மத்திய பிரதேசம் - 92.8 சதவீதம் - 62.9 சதவீதம்
* கர்நாடகா - 90.9 சதவீதம் - 59.1 சதவீதம்
* ஹரியானா - 90.04 சதவீதம் - 48.3 சதவீதம்
* அசாம் - 88.9 சதவீதம் - 50 சதவீதம்

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-நவ-202106:26:13 IST Report Abuse
Natarajan Ramanathan நிலக்கரி பற்றாக்குறை என்று வதந்தி கிளப்பினார்கள். இந்த ஆண்டு உலகில் நிலக்கரி உற்பத்தியில் இரண்டாவது இடம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு என்று தமிழகம் கூட ஓலமிட்டார்கள். ஆனால் தடுப்பூசி உற்பத்தி மிகவும் அதிகமாகி சேமிக்க இடம் இல்லாமல் ஏற்றுமதி ஆகிறது. தக்காளி விலையைகூட கட்டுப்படுத்த வக்கில்லாத மாநிலம் தமிழகம்தான்.
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
30-நவ-202105:39:07 IST Report Abuse
rajan மிக சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பு - மிக குறைந்த அளவில் தடுப்பூசி போட்ட மாநிலங்கள் / ஒன்றிய பிரதேசங்கள் நான்கும் பிஜேபி ஆட்சி உள்ளவை இதை மறைத்தது ஏன்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202105:34:13 IST Report Abuse
J.V. Iyer மத்திய அரசுடன் இணக்கமாக போகும் மாநில ஒன்றீய அரசுகளுக்கு மக்கள் மதிப்பளிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X