மக்களை ஏமாற்ற 'போலி காந்திகள்' முயற்சி: கர்நாடகா பா.ஜ., தாக்கு

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: நாடாளுமன்றம் காந்திசிலை முன் இன்று (நவ.,29) காலை காங்., நடத்திய போராட்டத்தை அடுத்து மக்களை ஏமாற்ற 'போலி காந்திகள்' முயற்சி மேற்கொண்டுள்ளதாக கர்நாடகா பா.ஜ., தாக்கி விமர்சித்துள்ளது.இன்று துவங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் பார்லிமென்டின் இரு அவைகளிலும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்கள் இல்லாமல்
Fake, Gandhis, Attempt, Deceive, People, Karnataka, BJP, Attack, பொதுமக்கள், ஏமாற்றம், போலி காந்திகள், முயற்சி, கர்நாடகா, பாஜ, தாக்கு,

புதுடில்லி: நாடாளுமன்றம் காந்திசிலை முன் இன்று (நவ.,29) காலை காங்., நடத்திய போராட்டத்தை அடுத்து மக்களை ஏமாற்ற 'போலி காந்திகள்' முயற்சி மேற்கொண்டுள்ளதாக கர்நாடகா பா.ஜ., தாக்கி விமர்சித்துள்ளது.

இன்று துவங்கிய குளிர்கால கூட்டத்தொடரில் பார்லிமென்டின் இரு அவைகளிலும் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன.


latest tamil newsமசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதில் விவாதம் தேவை என எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. விவாதம் இல்லாமல் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேறியது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்து இருந்தார்.

‛‛வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முன்பே கூறியிருந்தோம். தற்போது அந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு பார்லி.,யில் விவாதம் நடத்த அஞ்சுகிறது,'' எனக் கூறினார். இதற்கு தற்போது கர்நாடக பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.

‛‛விவசாய மசோதாக்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி நீக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் காங்., கட்சியை சேர்ந்த ராகுலின் சொர்க்கபுரியில் வாழும் போலி காந்திகள் பலர் காந்தி சிலை முன் நின்று போராட்டம் நடத்துகின்றனர்,'' என்று கர்நாடகா பா.ஜ., சமூக வலைதளப் பக்கத்தில் விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
30-நவ-202103:26:11 IST Report Abuse
Srivilliputtur S Ramesh ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு, மகாத்மா காந்தியோடு என்ன சம்பந்தம் ? என்ன மோசடி இது ? முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கணவரின் பெயர் பிரோஸ் காந்தி. அவர் ஓர் இஸ்லாமியர். அதனால், இந்திரா காந்தி தன் பெயருக்குப்பின்னால் "காந்தி" என்று போட்டுக்கொண்டார். இதைத்தவிர அந்த நேருவின் குடும்பத்துக்கும், காந்தியின் கொள்கைகளுக்கும் என்ன தொடர்பு ? ஒன்றுமே இல்லை..இது மோசடிக்குடும்பம் ஊழலின் ஊற்றுக்கண் காங்கிரஸ். "நகர்வாலா ஊழல்"...மஸ்டர் ரோல் ஊழல், போபோர்ஸ் பீரங்கி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டிகளில் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நீர்மூழ்கி ஊழல், அந்த காங்கிரஸ் தற்போது "நேருவின்" குடும்பத்துக்குள் அடக்கம்.
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
30-நவ-202101:37:21 IST Report Abuse
BALU முதலில் பாராளுமன்ற வளாகத்தில் இருக்கும் காந்தி சிலையை அப்புறப் படுத்த வேண்டும். காந்தியடிகளைப் பற்றியே பெரும்பாலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையே காங்கிரஸ் நம் மக்கள் மனதில் பதித்து வைத்துள்ளது.காந்தியடிகள் கூட சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிடும்படி கூறினார். காங். தலைமை அதைச் செய்ததா?? காந்தியின் பல்வேறு செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப் பட்டு வெளிச்சத்திற்கு கொண்டு வரப் படவேண்டும். எது உண்மையோ அது மக்களுக்குத் தெரியட்டுமே
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
29-நவ-202123:31:10 IST Report Abuse
rajan Modi said that all matters can be discussed in the parliament. To prove his lie, voice vote without discussion was done. Also speaker denied request for discussion. Lier modi, cheater modi, fraud modi. Modi doesn't have guts to face and answer questions always. He knows to ask questions but don't know to reply any question this happened in earlier also. So people can understand modi and bjp.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X