அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீரில் நனையாமல் சேரில் தாவி, காரில் ஏறிய திருமாவளவன்; வைரல் வீடியோ

Updated : நவ 30, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (133)
Share
Advertisement
சென்னை: டில்லி புறப்பட தயாராக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், வீட்டில் மழைநீர் சூழ்ந்ததால், அணிந்திருந்த ஷூ நீரில் நனையாமல் இருக்க தொண்டர்கள் உதவியுடன் பார்வையாளர் அமரும் சேரில் மாறி, மாறி வந்து காரில் ஏறிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.சென்னை வேளச்சேரி தமிழ்நாடு குடியிருப்பு காலனியில் முதலாவது அவென்யூவில் விடுதலை கட்சி தலைவர்
மழைநீர்  ஷூ ,  சேர், கார், திருமாவளவன்

சென்னை: டில்லி புறப்பட தயாராக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளன், வீட்டில் மழைநீர் சூழ்ந்ததால், அணிந்திருந்த ஷூ நீரில் நனையாமல் இருக்க தொண்டர்கள் உதவியுடன் பார்வையாளர் அமரும் சேரில் மாறி, மாறி வந்து காரில் ஏறிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை வேளச்சேரி தமிழ்நாடு குடியிருப்பு காலனியில் முதலாவது அவென்யூவில் விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன்வீடு உள்ளது. கடந்த சில நாட்களால் பெய்து வரும் கனமழை காரணமாக அவரது வீட்டில் மழைநீர் புகுந்தது. இன்று (நவ.29) டில்லியில் நடந்து வரும் பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்னை விமானநிலையம் செல்ல தயாரானார்.


திருமாவளவன் அசத்தல் | Thirumavalavan VCK Rainwater

latest tamil news
அப்போது அவரது, வீட்டில் சுமார் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியிருந்தது. அதனால் தான் அணிந்திருந்த 'ஷூ' நீரில் நனையாமல் எப்படி காருக்கு செல்வது என யோசித்தார். உடனே பார்வையாளர்கள் அமர போடப்பட்டிருந்த இரும்பு சேர் மீது ஏற , அதனை தொண்டர்கள் லாவகமாக இழுத்துக்கொண்டு வந்தனர். ஒரு வழியாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


திருமாவளவன் விளக்கம்:


இந்த சம்பவம் தொடர்பாக திருமாவளவன் கூறியதாவது: நான் தங்கியுள்ளது வீடு அல்ல, அறக்கட்டளை. ஒவ்வொரு மழையின்போதும் கழிவுநீர் சூழ்ந்து கொள்ளும். டில்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இருக்கை மீது ஏறி நடந்தேன். அவசரமாக புறப்பட்டபோது நான் கீழே விழாமல் இருக்க தொண்டர்கள் என்னை பிடித்துக்கொண்டனர். அடிமைப்படுத்தும் எண்ணம் எப்போதும் இல்லை. பேசவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும் அவற்றை விட்டுவிட்டு எங்கள் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
வன்னிஅரசு விளக்கம்


இது தொடர்பாக வி.சி.க செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது: வேளச்சேரியில் மருதம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள ஓர் அறையில் தான் திருமாவளவன் கடந்த15 ஆண்டுகளாக தங்கி வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு பெய்த மழையில் எப்படி கீழ்த்தளம் முழுக்க தண்ணீர் புகுந்ததோ, அப்படி தான் இந்த ஆண்டும்.ஒரு தலைவர் நினைத்தால் சொகுசு ஓட்டலில் கூட தங்கலாம். ஆனால் அதையெல்லாம் விடுத்து தம்பிகளோடவே தங்குகிறார்.
முழங்கால் அளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள் தம்பிகள். இது கூட பொறுக்க முடியாத அரசியல் வன்மத்தர்களும் அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (133)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
30-நவ-202122:21:49 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இதை தவரான கண்ணோட்டத்தில் ஏன் பார்கிறீறர்கள்? கீழே விழுந்த மேலதிகாரியின் மூக்கு துடைத்த கை குட்டையை அவர் கீழ் வேலை பார்ப்பவர் எடுத்து தருவதில்லையா? போலீஸ் அதிகாரியின் shoe lace (parade and important function இல்) கட்டி விடுவதில்லையா? அமைச்சர், முதல் அமைச்சர்களுக்கு குடை பிடிப்பதில்லையா? இது ஒரு எஜமான விசுவாசம். இதில் தவறில்லை.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
30-நவ-202120:59:24 IST Report Abuse
bal எத்தனை தடவை கழுவிக்கழுவி ஊத்தினாலும் இந்த ஆளும் இவனுக்கு வோட்டு போட்ட மக்களும் திருந்தமாட்டார்கள்.
Rate this:
Cancel
Ramar Srp - Sivakasi,இந்தியா
30-நவ-202118:51:00 IST Report Abuse
Ramar Srp வன்னி அரசு என்னதான் பேருக்கு கருத்து கூறினாலும் மனசுக்குள்ள சிாிச்சுக்கிட்டேதான் இருப்பதாக தகவல்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X