மருத்துவமனை மீது விழுந்த மரத்தால் பாதிப்பு | Dinamalar

மருத்துவமனை மீது விழுந்த மரத்தால் பாதிப்பு

Added : நவ 29, 2021 | |
குன்னுார்: குன்னுாரில் இரவில் பெய்த கன மழையால், அரசு லாலி மருத்துவமனை மீது மரம் விழுந்து கூரை சேதம் அடைந்தது.குன்னுார் பகுதிகளில் கடந்த சில நாட்களாக, இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குன்னுார் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால், அரசு லாலி மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு கட்டடத்தின் மீது, மரம் விழுந்தது. காலை நேரம்

குன்னுார்: குன்னுாரில் இரவில் பெய்த கன மழையால், அரசு லாலி மருத்துவமனை மீது மரம் விழுந்து கூரை சேதம் அடைந்தது.குன்னுார் பகுதிகளில் கடந்த சில நாட்களாக, இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், குன்னுார் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால், அரசு லாலி மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு கட்டடத்தின் மீது, மரம் விழுந்தது. காலை நேரம் என்பதால், குறைவாக இருந்த ஊழியர்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் . மருத்துவமனை கூரை மட்டும் சேதமடைந்தது. மருத்துவமனை ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X