பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : நவ 29, 2021
Share
Advertisement
நவ., 30, 1923கேரள மாநிலம், திருவாங்கூர் அருகேயுள்ள வைக்கம் எனும் ஊரில், 1923 நவம்பர் 30ல் பிறந்தவர், வி.என்.ஜானகி. தன் 12வது வயதில், தாய் நாராயணியம்மாள் உடன், கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கு, ராஜகோபால அய்யர் என்பவருக்கு, நாராயணியம்மாள் துணைவி ஆனார். பின், குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார். மன்மத விஜயம் படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமானார் ஜானகி.நடிகரும்,

இதே நாளில் அன்று


நவ., 30, 1923



கேரள மாநிலம், திருவாங்கூர் அருகேயுள்ள வைக்கம் எனும் ஊரில், 1923 நவம்பர் 30ல் பிறந்தவர், வி.என்.ஜானகி. தன் 12வது வயதில், தாய் நாராயணியம்மாள் உடன், கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கு, ராஜகோபால அய்யர் என்பவருக்கு, நாராயணியம்மாள் துணைவி ஆனார். பின், குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார். மன்மத விஜயம் படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமானார் ஜானகி.நடிகரும், ஒப்பனையாளருமான கணபதிபட் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். பின், எம்.ஜி.ஆரை காதலித்து, அவரின் மூன்றாவது மனைவியானார்.முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., இறந்ததை அடுத்து, 1988 ஜனவரி 7ல் முதல்வராக பொறுப்பேற்றார். தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை பெற்றார். நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வியுற்று, 23 நாளில், ஆட்சிப் பொறுப்பை இழந்தார். 1996 மே 19ல், தன் 73-வது வயதில் காலமானார்.வி.என்.ஜானகி பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X