எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.,க்கள் 'சஸ்பெண்ட்!'  ஆக., 11ல் அமளியில் ஈடுபட்டதால் அதிரடி

Updated : டிச 01, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின்போது ராஜ்யசபாவில் விதிகளை மீறி அடாவடியில் ஈடுபட்டதற்காக, சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த கூட்டத் தொடர் முழுவதற்கும் சபைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது.
எதிர்க்கட்சிகள்,  12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்!  ஆக., 11

புதுடில்லி :பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின்போது ராஜ்யசபாவில் விதிகளை மீறி அடாவடியில் ஈடுபட்டதற்காக, சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்த கூட்டத் தொடர் முழுவதற்கும் சபைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ராஜ்யசபாவில் தலைவர் வெங்கையா நாயுடு துவக்க உரையாற்றி, கூட்டத் தொடரை துவக்கி வைத்தார்.இதையடுத்து, பார்லி., விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, 256 சட்டப் பிரிவின் கீழ், கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது, ஆகஸ்ட் 11ல் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 12 பேரை, இந்த தொடர் முழுதும் 'சஸ்பெண்ட்' செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:இதுவரை இல்லாத வகையில் கடந்த மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளன்று, ராஜ்ய சபாவின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் குலைக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 பேர் அமளியில் ஈடுபட்டனர். திட்டமிட்டு சபை காவலர்களை தாக்கி, சபையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட்டனர்.

இதற்காக அவர்களை ராஜ்யசபா அலுவல் சட்ட விதிமுறை 256 பிரிவின் கீழ், இந்த கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்யக் கோரி இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, குரல் ஓட்டெடுப்பு வாயிலாக தீர்மானம் நிறைவேறியது. அப்போது சபையை நடத்திய ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், 12 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கூறி, சபை நாளை வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.


வெங்கையா வேண்டுகோள்ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு நேற்று ஆற்றிய துவக்க உரை: கடந்த மழைக்கால கூட்டத் தொடர் கசப்பான அனுபவத்தை தந்தது. அதுபோலன்றி தற்போதைய குளிர்கால கூட்டத் தொடரில் சபையின் கவுர வத்தை யும், கண்ணியத்தையும் காத்து, இயல்பான நிலையை ஏற்படுத்த எம்.பி.,க் கள் உதவுவர் என நம்புகிறேன். புதிய மசோதாக்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் நம்பிக்கையை பெற்ற பின் தாக்கல் செய்யும்படி அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளேன். அதுபோல மசோதாவின் நன்நோக்கம் புரிந்து, அதை நிறைவேற்ற அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


யார் அந்த 12 பேர்?ராஜ்யசபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.,க்களில் புலோ தேவி நேதம், சாயா வர்மா, ரிபுன் போரா, ராஜாமணி படேல், சையத் நசீர் உசேன், அகிலேஷ் பிரசாத் சிங் ஆகிய ஆறு பேர் காங்கிரசைச் சேர்ந்தவர்கள்.
சிவசேனாவைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய், திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் டோலா சென், சாந்தா செட்ரி. மார்க்சிஸ்ட் எம்.பி., இலமரம் கரீம், இந்திய கம்யூ., - எம்.பி., பினோய் விஸ்வம் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-நவ-202117:11:06 IST Report Abuse
அப்புசாமி ஆகஸ்டுல செஞ்ச அமளிக்கு இன்னிக்கி சஸ்பெண்டுன்னு சொல்லி என்ன பயன்? அந்த அமளி முடிஞ்சப்பவே சொல்லியிருக்கணும். அவிங்களுக்கு மூணு மாச சம்பளத்தைக் கட் பண்ணியிருந்தா, அப்பவே கோர்ட்டுக்குப் போயிருப்பாங்க. உச்சநீதி மன்றம் ஏதாவது தீர்ப்பும் வழங்கியிருக்கும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
30-நவ-202109:33:38 IST Report Abuse
RajanRajan இவனுங்களை சஸ்பெண்ட் பண்ணினது மட்டும் போதாது. சபைக்கு வாராத நாட்களின் சம்பளம் படி போன்றவற்றையும் தடை செய்யுங்கள். நாட்டின் இறையாண்மையை கட்டிக்காக்க இவனுங்களை தண்டிக்கும் வகையிலே சட்டம் இயற்றுங்கள். பொறுப்பற்ற பேமானிகள் இந்த நாட்டிற்கு தேவை இல்லை.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-நவ-202108:44:56 IST Report Abuse
sankaseshan Such stern actions are needed in the present circumstances. Roudism of members are increasing day by day .congratulations to leaders of Rajyasaba
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X