பிரச்னைகளை விவாதிக்க தயார் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு| Dinamalar

பிரச்னைகளை விவாதிக்க தயார் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

Updated : டிச 01, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (9) | |
புதுடில்லி ;''நடப்பு குளிர்கால கூட்டத் தொடர், பார்லிமென்ட் சிறப்பாக செயல்படுவதற்கான ஓர் அளவுகோலாக இருக்க வேண்டும். கட்டாயப்படுத்தி முடக்குவதற்கான அளவுகோலாக மாறிவிடக் கூடாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.மக்களின் வளர்ச்சிபார்லி., குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இதற்கு முன், நிருபர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:அனைத்து பிரச்னைகள்
பிரச்னைகள், விவாதிக்க தயார் பிரதமர்  மோடி அறிவிப்பு

புதுடில்லி ;''நடப்பு குளிர்கால கூட்டத் தொடர், பார்லிமென்ட் சிறப்பாக செயல்படுவதற்கான ஓர் அளவுகோலாக இருக்க வேண்டும். கட்டாயப்படுத்தி முடக்குவதற்கான அளவுகோலாக மாறிவிடக் கூடாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.மக்களின் வளர்ச்சிபார்லி., குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இதற்கு முன், நிருபர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:
அனைத்து பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், அனைத்து கேள்விகளுக்கு பதிலளிக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது.

இந்தத் கூட்டத் தொடர் மட்டுமல்ல, எதிர்காலத் தொடர்களிலும் நாட்டின் வளர்ச்சி குறித்து விவாதம் நடக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.நாட்டின் வளர்ச்சி, மக்களின் வளர்ச்சிக்கான நேர்மறையான மற்றும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான முடிவுகள் இந்தக் கூட்டத் தொடரில் எடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.


75வது சுதந்திர தினம்



ஒரு கூட்டத் தொடர் எப்படி சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்கான ஓர் அளவுகோலாக இந்தக் கூட்டத் தொடர் அமையும் என எதிர்பார்க்கிறேன்; கட்டாயப்படுத்தி முடக்குவதற்கான அளவுகோலாக மாறிவிடக் கூடாது.நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் பார்லி மென்டின் கவுரவத்தை, கண்ணியத்தை கட்டிக் காக்கும் வகையில் அனைத்து எம்.பி.,க்களும் செயல்பட வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும்.
கொரோனாவுக்கு எதிராக மக்களை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் எம்.பி.,க்கள் முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.மிக விரைவில் 150 கோடி 'டோஸ்' தடுப்பூசி செலுத்தும் சாதனையை எட்ட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர்
கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X