'பிட்காயினுக்கு' அங்கீகாரமா? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

Updated : டிச 01, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி :''நம் நாட்டில், 'பிட்காயின்' என்ற, 'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் எந்த திட்டமும் இல்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று, லோக்சபாவில் தெரிவித்தார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் நேற்று லோக்சபாவில் எழுத்து வாயிலாக அளித்த பதில்: பிட்காயினுக்கு அங்கீகாரம்
பிட்காயின், அங்கீகாரமா? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

புதுடில்லி :''நம் நாட்டில், 'பிட்காயின்' என்ற, 'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் எந்த திட்டமும் இல்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று, லோக்சபாவில் தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் நேற்று லோக்சபாவில் எழுத்து வாயிலாக அளித்த பதில்: பிட்காயினுக்கு அங்கீகாரம் அளிக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. கிரிப்டோகரன்சிகளை கட்டுப்படுத்தும் வகையிலும், ரிசர்வ் வங்கி வாயிலாக மெய்நிகர் நாணயம் அறிமுகம் செய்யும் வகையிலும் புதிய மசோதா இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நடப்பு 2021 - 2022 நிதியாண்டில், ஏப்., - செப்., காலகட்டத்தில் 2.29 லட்சம் கோடி ரூபாய் மூலதன செலவீனம் செய்யப்பட்டுள்ளது. இது, பட்ஜெட் ஒதுக்கீட்டில் 41 சதவீதம். மூலதன முதலீடுகள் வாயிலாக, புதிய உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, வரையறுக்கப் பட்டுள்ளன.

அதன்படி 6,835 திட்டங்கள், 111 லட்சம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.இதைத் தவிர உள்கட்டமைப்பு வசதிகளை விரைவுபடுத்தும் வகையில், மாநிலங்கள் மற்றும் துறைகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் கதி சக்தி திட்டமும் அறிமுகம்
செய்யப்பட்டு உள்ளது.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசலுக்கான மத்திய அரசின் கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களிலும் வரி குறைப்பை அறிவித்துள்ளன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkates - ngr,இந்தியா
30-நவ-202123:25:27 IST Report Abuse
venkates தமிழ்நாட்டில் விடியல் குறைக்க வில்லையே ஏன்?
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
30-நவ-202110:43:32 IST Report Abuse
Suri நிம்மிக்கு எண்டு கார்டு கிடையாதா? அணில் அம்பானிக்கு அவ்வளவு செல்வாக்கா?
Rate this:
30-நவ-202114:27:58 IST Report Abuse
ஆரூர் ரங்ஒரு பெண் உயர் பதவியில் இருப்பது அவ்வளவு எரிகிறதா? உலகம்🤪 முழுவதும் உள்ள நோய் அது...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
30-நவ-202109:48:08 IST Report Abuse
RajanRajan கிரிப்ட்டோ கரன்சி என்பது கருப்புப்பண பெருக்கத்திற்கு வழிவகுக்கும் ஒரு உலகளாவிய பிரச்சினை. தீர்வு காப்பது கடினம் என்பதும் உண்மை தான். விடியல் ஆட்சி பீடம் ஏறின உடனே குரானா பண்ட் என்று வசூல் ராஜா வேட்டையை துவங்கி அத்தனை கட்டுமான பொருட்களின் விலைகளை உச்சம் தொட வச்சு ஆட்டைய போட்டானுங்க. மக்களை பற்றியோ குரானா தாக்கம் பற்றி எல்லாம் இவனுங்களுக்கு கவலையுமில்லை அக்கறையும் இல்லை என ஆட்டம் போட்டானுங்க. இந்த ஸ்டிக்கர் ஒட்டி கூப்பாடு போடுற கூட்டத்தை கட்டு படுத்த மக்களை இவனுங்க விலைவாசி உயர்வு இம்சைலே இருந்து பாதுகாக்க மத்திய அரசு தான் முன் வர வேண்டும். துட்டுக்கு ஒட்டு போட்ட மக்கள் தவறு ஒரு பக்கம் இருந்தாலும் அவர்களை தவறாக வழிநடத்திய மாநில காட்சிகளை ஒடுக்க நம் சட்டத்தில் இடமில்லை என்பதும் ஒரு அவலம் தான். ஜெய் ஸ்ரீராம்.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
30-நவ-202114:26:49 IST Report Abuse
pradeesh parthasarathyபெங்களுருவில் உங்கள் கட்சிக்காரங்க ஈடுபட்ட கிரிப்ட்டோ கரன்சி மோசடி சம்பந்தப்பட்ட செய்தியை மோடி ஊடகங்கள் இருட்டடிப்புஉ செய்தனர் .... மொத்த கருப்பு பண முதலைகளும் பிஜேபி யின் தானே உள்ளனர் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X