எதிர்க்கட்சி தலைவர்கள் திடீர் ஆலோசனை

Updated : டிச 01, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :டில்லியில் நேற்று காலை பார்லி., எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பார்லி., குளிர்கால கூட்டம் நேற்று துவங்கியது. முன்னதாக பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நடந்தது. பங்கேற்க முடியாதுகாங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அறையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 11
எதிர்க்கட்சி தலைவர்கள் திடீர் ஆலோசனை

புதுடில்லி :டில்லியில் நேற்று காலை பார்லி., எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பார்லி., குளிர்கால கூட்டம் நேற்று துவங்கியது. முன்னதாக பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நடந்தது.


பங்கேற்க முடியாது



காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அறையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 11 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
'இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது' என, திரிணமுல் காங்., ஆம் ஆத்மி கட்சி கள் ஏற்கனவே தெரிவித்து விட்டன. இக்கூட்டத்தில் காங்., - எம்.பி.,க்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாணிக்கம் தாக்குர், கே. சுரேஷ், கவுரவ் கோகோய், தி.மு.க., - எம்.பி.,க்கள் சிவா, பாலு, ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி., மனோஜ் ஜா, தேசியவாத காங்., எம்.பி.,க்கள் வந்தனா சவான், சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


வலியுறுத்தல்



மேலும், மார்க்சிஸ்ட் கம்யூ., இலமரம் கரீம், இந்திய கம்யூ., பினோய் விஸ்வம், ம.தி.மு.க.,வின் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் முகமது பஷீர், அப்துல் வகாப், தேசிய மாநாட்டு கட்சி எம்.பி., ஹஸ்னைன் மசூத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்று, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டங்களை இயற்ற, மத்திய அரசை வற்புறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த 700 பேருக்கு இழப்பீடு வழங்க, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் சிலர் கோரிக்கை விடுத்தனர்.


காங்., - எம்..பி.,க்கள் கோஷம்



பார்லி., - காங்., அலுவலக அறையில் அக்கட்சித் தலைவர் சோனியா தலைமையில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா காங்., - எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. இதையடுத்து, சோனியா தலைமையில் புறப்பட்ட காங்., - எம்.பி.,க்கள் பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் கூடி, 'வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என, கோஷமிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
30-நவ-202117:17:01 IST Report Abuse
a natanasabapathy இதுபோல் ரவுடி தனம் செய்தால் மக்களின் வெறுப்பை தான் சம்பாதிக்க நேரிடும். இப்போதே காங்கிரஸ் கடலில் கரைத்த பெருங்காயம் போல் தான் உள்ளது அடியோடு ஒழிந்துவிடும் விரைவில்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
30-நவ-202112:36:52 IST Report Abuse
Anand நாசகார கும்பலின் ஆலோசனை கூட்டம், கூடிய சீக்கிரம் அழிந்து போகும் ....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202108:06:08 IST Report Abuse
Kasimani Baskaran அமளி செய்வோரை தூக்கி வெளியே போடப்போவதாக முன் தகவல் கசிந்துவிட்டது... அதனால்த்தான் இப்பட்டி ஒரு நாடகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X