பொது செய்தி

இந்தியா

'கோவாக்சின்' தடுப்பூசி ஏற்றுமதி துவங்கியது

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :நம் நாட்டில் தயாராகும் 'கோவாக்சின்' தடுப்பூசிகளின் ஏற்றுமதி மீண்டும் துவங்கி உள்ளதாக, பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. அத்துடன், இங்கிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.நாட்டில் வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிகரித்ததை அடுத்து தடுப்பூசி ஏற்றுமதிக்கு
'கோவாக்சின்', தடுப்பூசி, ஏற்றுமதி, துவங்கியது

புதுடில்லி :நம் நாட்டில் தயாராகும் 'கோவாக்சின்' தடுப்பூசிகளின் ஏற்றுமதி மீண்டும் துவங்கி உள்ளதாக, பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. அத்துடன், இங்கிருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
நாட்டில் வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிகரித்ததை அடுத்து தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.


latest tamil news



தற்போது பரவல் குறைந்துள்ளதுடன், 122 கோடிக்கும் அதிகமான 'டோஸ்' தடுப்பூசி மக்களை சென்றடைந்து உள்ளது. இதனால் தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, கோவாக்சின் ஏற்றுமதியை துவங்கியுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கூறியதாவது:தடுப்பூசி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி. இதன் வாயிலாக நீண்ட காலம் நிலுவையில் இருந்த ஏற்றுமதிக்கான முன்பதிவுகளை அனுப்பி வைக்கும் பணி துவங்கி உள்ளது.அவசரகால பயன்பாட்டிற்கு கோவாக்சினை அனுமதித்த நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதி டோஸ் எண்ணிக்கை அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BALOU - st-denis,பிரான்ஸ்
29-நவ-202122:41:04 IST Report Abuse
BALOU வாழ்த்துகள் இந்தியா .இந்தியாவில் பிறந்ததற்காக பெருமைபடுகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X