சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவோயிஸ்ட்டாக மாறிய மகன்; நடந்தது என்ன? சப்-கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர்

Added : நவ 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி: 'கேரளாவில் மாவோயிஸ்டாக மாறிய மகனை மீட்டுக்கொடுக்க வேண்டும்' என, பொள்ளாச்சி சப் - கலெக்டரிடம் மனு கொடுத்து, பெற்றோர் கண்ணீர் வீட்டு அழுதனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சியை சேர்ந்த அர்ஜுனன் - கலைச்செல்வியின் மகன் சந்தோஷ்குமார்; 2014ம் ஆண்டு கோவை அரசு கல்லுாரியில், பி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து வந்தார். அப்போது சிலர், மூளை சலவை செய்து,
 மாவோயிஸ்ட்டாக மாறிய மகன்; நடந்தது என்ன?  சப்-கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர்



பொள்ளாச்சி: 'கேரளாவில் மாவோயிஸ்டாக மாறிய மகனை மீட்டுக்கொடுக்க வேண்டும்' என, பொள்ளாச்சி சப் - கலெக்டரிடம் மனு கொடுத்து, பெற்றோர் கண்ணீர் வீட்டு அழுதனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சியை சேர்ந்த அர்ஜுனன் - கலைச்செல்வியின் மகன் சந்தோஷ்குமார்; 2014ம் ஆண்டு கோவை அரசு கல்லுாரியில், பி.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து வந்தார். அப்போது சிலர், மூளை சலவை செய்து, மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைத்து விட்டதாக கூறப்படுகிறது.கடந்த 2015ம் ஆண்டு, மகனை காணவில்லை என, ஆழியாறு போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் புகார் கொடுத்தனர். விசாரணையில், சந்தோஷ்குமார் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்தது தெரியவந்தது.பெற்றோர் கூலி வேலைக்கு சென்று, வாழ்க்கையை நகர்த்துகின்றனர். என்றாவது ஒரு நாள் மகன் மீண்டு வருவானா என்ற நம்பிக்கையில் எட்டு ஆண்டுகளாக, காத்திருக்கின்றனர்.'மகனை மீட்டுத்தாருங்கள்' என, சப் - கலெக்டரிடம் நேற்று, பெற்றோர் மனு கொடுத்து, கண்ணீர் விட்டு அழுதனர்.பெற்றோர் கூறியதாவது:சந்தோஷ்குமாரை பார்க்க, பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றனர்.அவர்கள் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் என, எங்களுக்கு தெரியாது. ஒரே மகன் எங்களுடன் இல்லாததால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். கடைசி காலத்தில், மகனுடன் இருக்க வேண்டும் என, ஆசையாக உள்ளது.கேரளாவில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது, மகன் உயிருடன் இருக்கிறானா என்பது சந்தேகமாக உள்ளது. எங்களது கடைசி கட்ட போராட்டமாக நினைத்து, மகனை மீட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


'யாருக்கும் இந்த நிலை கூடாது!'

சந்தோஷ்குமாரின் அக்கா சுகன்யா கூறியதாவது:எனக்கு, 13 ஆண்டுகளுக்கு முன், திருமணமாகி திருப்பூரில் வசிக்கிறேன். அங்கலக்குறிச்சியில் இருக்கும் எங்க அப்பா, அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க. தம்பியை கண்டுபிடிச்சு கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி எந்த பசங்களுக்கும் இந்த நிலை வரக்கூடாது. கூப்பிட்டு போனவங்க எல்லாம் நல்லா இருக்காங்க. நாங்க தான் கஷ்டப்படுறோம். தம்பியை கண்டுபிடிச்சு கொடுத்தால் போதும். அதுவரைக்கும், அப்பா, அம்மாவுக்கு அரசு ஏதாவது உதவி பண்ணணும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X