சீன அதிபர் பெயரை வைரஸுக்கு சூட்ட தயங்கிய உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் மீது விமர்சனம்

Updated : நவ 29, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஜெனீவா: சீன அதிபர் பெயரை வைரஸுக்கு சூட்ட தயங்கிய உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் மீது இணையத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.தென்னாப்பிரிக்காவில் உருவாகிய கொரோனா வைரஸின் உச்சபட்ச ஆபத்தான ரகம் ஓமிக்ரான். தற்போது ஓமிக்ரான் உலக அளவில் 14-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருவது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஆபத்தான அதிவேகமாகப் பரவி கூடிய வைரஸ் ரகத்தை

ஜெனீவா: சீன அதிபர் பெயரை வைரஸுக்கு சூட்ட தயங்கிய உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் மீது இணையத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.



latest tamil news



தென்னாப்பிரிக்காவில் உருவாகிய கொரோனா வைரஸின் உச்சபட்ச ஆபத்தான ரகம் ஓமிக்ரான். தற்போது ஓமிக்ரான் உலக அளவில் 14-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருவது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆபத்தான அதிவேகமாகப் பரவி கூடிய வைரஸ் ரகத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல தென்னாபிரிக்காவுடனான விமான சேவையை துண்டித்துள்ளன. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் தற்போது முதலே இந்த வைரசை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன.

கடந்த நவம்பர் 26ஆம் தேதி இந்த வைரசுக்கு கிரேக்க எழுத்துக்களில் ஒன்றான ஓமிக்ரான் என்கிற பெயர் உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகளால் சூட்டப்பட்டது.பொதுவாக வைரஸ் ரகங்களுக்கு கிரேக்க எழுத்துக்களால் பெயர் சூட்டுவது வழக்கம்.
இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான விஞ்ஞான குறியீடுகள் அனைத்தும் கிரேக்க மொழியை சார்ந்தவையே. ஆல்பா, பீட்டா, காமா, லாம்டா, எப்ஸிலோன், பை உள்ளிட்ட பல கிரேக்க எழுத்துக்கள் இயற்பியல் சூத்திரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல வைரஸ் ரகங்களுக்கும் கிரேக்க எழுத்துக்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. கொரோனாவின் தீவிர ரகமான டெல்டா ரகமும் கிரேக்கப் பெயர் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான 'நூ' என இந்த ரகத்துக்கு பெயர் சூட்டத் திட்டமிட்டனர். ஆனால் அந்த எழுத்து ஆங்கில வார்த்தையான 'நியூ' என்ற வார்த்தையுடன் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அது நிராகரிக்கப்பட்டது. மேலும் நூ என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் நிர்வாணம் என்ற பொருளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்து 'ஜி' (Xi) என்கிற கிரேக்க எழுத்தைக் கொண்டு இந்த வைரஸுக்கு பெயர் சூட்ட பரிசீலிக்கப்பட்டது. ஆனால் சீன அதிபர் ஜி ஜிங்பிங் பெயரை குறிக்கும் வகையில் இது அமைந்து விடக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் இந்த எழுத்தையும் தவிர்த்து விட்டனர்.


latest tamil news



இதற்கு அடுத்து வரும் கிரேக்க எழுத்துதான் ஓமிக்ரான் (omicron). தற்போது இந்த பெயர் புதிய வைரசுக்கு சூட்டப்பட்டுள்ளது. உலகத்துக்கே கொரோனாவை பரப்பிய சீனாவின் அதிபர் பெயரை வைரஸ் ரகத்துக்கு சூட்ட உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் தயங்குவது சமூக வலைதளங்களில் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
30-நவ-202112:35:32 IST Report Abuse
jayvee 'க்சி ஒமேகிரன்' என்று இந்தியா அழைக்கவேண்டும்
Rate this:
Cancel
Raja - Coimbatore,இந்தியா
30-நவ-202109:44:51 IST Report Abuse
Raja இதற்கு முன் எபோலா என்ற வைரஸ் பரவியதே. அதை எந்த அதிபர் பரப்பினார் என்று சொல்லுங்களேன். பொது மக்கள் பேசுவது போல பிரதான ஊடகங்கள் பேசுவது தவறு.
Rate this:
Sriram - chennai,இந்தியா
30-நவ-202111:30:29 IST Report Abuse
Sriramஇன்றைய நிலைமைக்கு சீனாகாரனை என்ன சொன்னாலும் தப்பில்லை.....
Rate this:
Cancel
Raja - Coimbatore,இந்தியா
30-நவ-202109:42:31 IST Report Abuse
Raja சீன அதிபர் தான் கொரோனாவை பரப்பினார் என்று உங்களிடம் ஆதாரம் இருந்தால் அதை வெளியிடலாமே. பல கோடி பேர் படிக்கும் ஊடகம் இப்படி செய்தி வெளியிடுவது வருத்தத்துக்குரியது.
Rate this:
jayvee - chennai,இந்தியா
30-நவ-202113:36:15 IST Report Abuse
jayveeஉயிகூரில் இஸ்லாமியர்களை சீன துப்புறுத்தவில்லை என்று இம்ரான் கான் சொன்னால் எப்படி இருக்கும்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X