அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா வீடு சர்ச்சை அ.தி.மு.க., மேல்முறையீடு!

Updated : டிச 01, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சேலம் :''முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆவதில் ஏற்பட்ட பிரச்னையில் மேல்முறையீடு செய்வோம்,'' என, முன்னாள் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.சேலம் மாநகர அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று, உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதை ஆய்வு செய்த முன்னாள் முதல்வர் பழனிசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:அம்மா கிளினிக் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
ஜெயலலிதா வீடு சர்ச்சை அ.தி.மு.க., மேல்முறையீடு!

சேலம் :''முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆவதில் ஏற்பட்ட பிரச்னையில் மேல்முறையீடு செய்வோம்,'' என, முன்னாள் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாநகர அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று, உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதை ஆய்வு செய்த முன்னாள் முதல்வர் பழனிசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:அம்மா கிளினிக் தொடர்ந்து செயல்பட வேண்டும். அதில் பணியாற்றும் டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்களை நிறுத்தக் கூடாது. தொடர்ந்து இயங்க தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொடர் மழையால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துஉள்ளனர். மீண்டும் சேத மதிப்புகளை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் வீணாகிறது.

மழையால் நெல் வீணாவதை தடுக்க வேண்டும். சென்னையில் தேங்கிஉள்ள மழை நீரை உடனே அகற்றி, பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சேலத்தில் சிலிண்டர் வெடித்து வீடுகளை இழந்தவர்களுக்கு உடனே வீடு கட்டித் தர வேண்டும். இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது; 15 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்கு மாநில அரசு கேட்கும் நிதியை உடனே வழங்க, மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆவதில் ஏற்பட்ட பிரச்னைக்கு, அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்து, நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
30-நவ-202122:17:24 IST Report Abuse
Palanisamy T ஜெயா பெயரைச் சொல்லிச் சொல்லியேஅரசியல் செய்துக் காலம் தள்ளுவது நாகரீகமாகயில்லையே. ஒரு.பொறுப்பான எதிர் கட்சியாக ஸேயல்படலாமே. வெள்ளத்தால் மக்கள் படுகின்ற அவதி அல்லல்கள் உங்களுக்கு தெரிய வில்லையா? ஜெயாவும் தன் காலத்தில் மக்களுக்கு சரியாக எதுவும் செய்ய வில்லையே இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் ஆட்சியைப் பிடிப்பதில் மட்டும்தான் குறியாகவுள்ளனர். மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்வதில்லை.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
30-நவ-202112:42:58 IST Report Abuse
jayvee ஆக்கபூர்வமான, தைரியமான எதிர்க்கட்சியாக செயல்பட வக்கில்லை..
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
30-நவ-202112:26:23 IST Report Abuse
Suri கட்சி சொத்துக்களே தனி நபர் பெயரில் ஒளித்து வைத்து இருந்தால் அதையே மீட்கக்கோரி வழக்கு போட முடியாது. பிரமோத் மகாஜன் இருந்தார். அவர் திடுதிடுப்பென சுடப்பட்டார். எது எது எங்கே என்றே தெரியாமல் எவ்வளவு இழந்திருப்பார்கள்? அவருடைய வாரிசுகளுக்கு மற்ற வாரிசுகள் போல இடம் அளிக்கப்படாமல் போனதன் காரணமும் அது தான். அவர் சார்ந்த கட்சி அம்போவாக நின்றதை பார்த்தோமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X