வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா பார்லிமென்டில் நிறைவேறியது!

Updated : நவ 30, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
புதுடில்லி :குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், விவாதம் எதுவும் நடத்தப்படாமல் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேறியது. விவசாயிகளுக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். மத்திய அரசு அஞ்சுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். விவசாய
 வேளாண் சட்டங்கள் ரத்து பார்லிமென்ட், சோதா

புதுடில்லி :குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், விவாதம் எதுவும் நடத்தப்படாமல் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா, பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேறியது. விவசாயிகளுக்கு நீதி கேட்டு எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். மத்திய அரசு அஞ்சுவதாக காங்கிரஸ் முன்னாள்
தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாய துறையில் சீர்திருத்தம் செய்யும் வகையில் மூன்று மசோதாக்கள் பார்லிமென்டில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், உத்தர பிரதேசம் உட்பட சில மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், டில்லி எல்லையில் கடந்தாண்டு நவம்பரில் போராட்டத்தை துவக்கின.
பல சுற்று பேச்சு நடத்தியும் போராட்டத்தை கைவிட விவசாயிகள் மறுத்தனர். இதையடுத்து, இந்த சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார். 'விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடிய இந்த சட்டங்கள் குறித்து சிலருக்கு தெளிவுபடுத்த அரசு தவறிவிட்டது. அதனால், சட்டம் திரும்ப பெறப்படுகிறது. போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் வீடு திரும்ப வேண்டும்' என, மோடி வலியுறுத்தினார்.

இருப்பினும், எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பிரதமர் அறிவித்தபடி இந்த சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோதா, பார்லி., குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்து, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியதாவது: விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மூன்று விவசாய சட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. விவசாய துறையில் சீர்திருத்தம் செய்யப்படும் என, தன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த காங்., இரட்டை வேடம் போடுகிறது.
இந்த சட்டங்களின் முக்கியத்துவம், அதன் பலன்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்க, புரிய வைக்க மத்திய அரசு தவறிவிட்டது. இருப்பினும் அனைவருடன் இணைந்து, அனைவரின் நலனுக்காக என்ற கொள்கையின்படி இந்த சட்டங்கள் திரும்ப பெறப்படுகின்றன.பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்படுகிறது. ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது. அதனால், அவற்றை திரும்ப பெறும் மசோதா மீது எந்த விவாதமும் நடத்தத்தேவையில்லை.இவ்வாறு அவர் பேசினார்.


இதையடுத்து லோக்சபாவில் நேற்று அலுவல்கள் துவங்கியதும், 'விவசாயிகள் பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும்' என, காங்., - திரிணமுல் காங்., - தி.மு.க., உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.'போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்; அவர்களது மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்' என, அக்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, தி.மு.க., திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த எம்.பி.,க்கள், சபையின் மையப் பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். அதே நேரத்தில் காங்., - தேசிய வாத காங்., பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சியினர் தங்கள் இருக்கையில் அமர்ந்தபடி கோஷமிட்டனர்.

அமைதி காக்கும்படி சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷமிடவே, மசோதாவை நிறைவேற்றுவதற்கான குரல் ஓட்டெடுப்பை நடத்துவதாக அவர் அறிவித்தார். அதில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சபை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.லோக்சபாவை தொடர்ந்து ராஜ்யசபாவிலும் இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதா குறித்து சுருக்கமாக பேச, காங்.,கைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, சபை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் அனுமதி அளித்தார்.அதன் பின், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். பின், குரல் ஓட்டெடுப்பில் இந்த மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. சபை நடவடிக்கைகள் நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டன.


ராகுல் ஆவேசம்பார்லி.,யில் மசோதா நிறைவேறிய பின், காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியதாவது:விவசாய சட்டங்களை திரும்ப பெறும் மசோதா நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் இது தொடர்பாக எந்த விவாதமும் நடத்தாமல், ஒரு வார்த்தை கூட பேசாமல் மசோதாவை நிறைவேற்றி உள்ளனர். விவாதம் நடத்தியிருந்தால், தங்கள் தவறு உலகுக்கு தெரிந்து விடும் என பா.ஜ., அரசு பயந்துவிட்டது.

ஒரு சில பணக்கார தொழிலதிபர்களின் சக்தி, கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சக்திக்கு முன் நிற்க முடியாது. அதனால் தான், இந்த விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் என ஏற்கனவே கணித்தேன்.இச்சட்டங்களை திரும்ப பெற்றுள்ளது, விவசாயிகளுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே கிடைத்துள்ள வெற்றி. இந்த சட்டங்கள் பிரதமர் மோடியின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இல்லை. அவரை வேறொரு சக்தி இயக்கியுள்ளது.
விவாதம் நடந்திருந்தால், அந்த உண்மையை தெரிவிக்க வைத்திருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.


கோஷம்,எதிர்கோஷம்!லோக்சபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வந்தபோது, பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.பி.,க்கள், 'பாரத் மாதா கீ ஜே' என கோஷமிட்டனர். அதற்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், விவசாயிகள் வாழ்க எனப்படும், 'ஜெய் கிஷான்' என
எதிர்கோஷம் எழுப்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
30-நவ-202120:19:18 IST Report Abuse
s t rajan காங்கிரஸ், திமுக போன்ற எதிரிக் கட்சிகள் தாங்கள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் கொண்டு வரப்போவதாக அறிவித்த வேளாண் திருத்தங்களைத் தான் பிஜேபி அரசு செயல்படுத்தியது. பணக்கார விவசாயத் தரகர்களை 5 நட்சத்திர வசதிகளோடு தர்ணா நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த எதிரிக் கட்சிகள் இரட்டை வேடம் போடுவது வெட்ட வெளிச்சமாகி விட்டது. மேலும் அந்நிய சக்திகள் நாட்டில் (தரகர்கள் வேடங்களில்) நுழைந்து விடக்கூடாதே என்ற ஒரே நோக்கத்தில் தற்போது இந்தச் சட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளது. இதை நாடறியும். ரத்து செய்யப் பட்ட சட்டத்தை வைத்து இந்த எதிரிக் கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், மக்களை மீண்டும் ஏமாற்ற முயலுகிறது. வங்ஙாளத்திலேயே 90 தொகுதியில் வென்று காங்கிரஸை காலியாக்கிய பிஜேபி உபியில் மட்டுமல்ல பஞ்சாபிலும் வெற்றி பெறுவது திண்ணம்.
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
30-நவ-202116:58:21 IST Report Abuse
ஜெயந்தன் விவாதம் செய்யும் அளவிற்கு எங்களுக்கு மூளை கிடையாது...எங்கள் விருப்பப்டி ஒரு சட்டத்தை கொண்டு வருவோம்...தேர்தல் வந்தால் அதை வாபஸ் பெறுவோம்...தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் கொண்டு வருவோம்..அதே போல தேர்தல் வரும் போது பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம்.. இப்போது 25 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றவில்லை. தேர்தல் முடிந்தவுடன் தான் ..இருக்கிறது வேடிக்கை.. மெஜாரிட்டி இருக்கும்போது எதற்கு விவாதம்...
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
30-நவ-202114:45:11 IST Report Abuse
Suri 56 இஞ்சுக்காரர் நாடாளுமன்றத்தில் பேசியவை எல்லாம் ஒத்த குரலாக அவர் சொல்ல வந்தத சொல்லிவிட்டு அழுதுகாண்ப்பிக்க நினைத்த அழுது காண்பித்துவிட்டு போய் விடுவார்.நடித்து காண்பிக்க நினைத்த நடித்து காண்பித்து சென்று விடுவார்.இதை தவிர ஜனநாயக செயல்பாடுகளில் வேறு எந்த விதத்தில் ஈடுபட்டுள்ளார்? பத்திரிகையாளர் சந்திப்பு உண்டா? மக்கள் கேள்விகளுக்கு என்றாவது பதில் அளித்துள்ளாரா?அரசின் அப்பட்டமான தோல்விகளுக்கு பொறுப்பேற்று உள்ளாரா ( பணமதிப்பிழக்கம்) ? நான்கு மாதங்களில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக இந்த பின் வாங்கல் என்பதை அறியாத அறிவிலிகளா விவசாயிகள்? போராட்டத்தில் இறந்தவர்களுக்கு ஒரு இரங்கல் உண்டா? கார் ஏற்றி கொல்லப்பட்டவிதம் ஏற்புடையதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X