அவிநாசி: 'குழாய் பதிப்பின் போது, ஏற்கனவே, உள்ள குழாய் உடைக்கப்பட்டதால் தண்ணீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,' என, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவிநாசி ஊராட்சி ஒன்றியம், கருமாபாளையம் ஊராட்சி தலைவர் சக்திவேல், அத்திக்கடவு -- அவிநாசி திட்ட செயற்பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனு:கருமாபாளையம் ஊராட்சி, புளியம்பட்டி சாலையில் இருந்து, தண்ணீர்பந்தல் காலனி, ஈப்பன் நகர் வழியாக, செம்மாண்டம்பாளையம் வரை, அத்திக்கடவு -- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ், குழாய் பதிக்கும் பணி நடந்தது.அப்போது, ஊராட்சி சார்பில், ஏற்கனவே பதிக்கப்பட்ட குடிநீர் குழாய், 1.5 கி.மீ. துாரம் சேதமடைந்து விட்டது. இதனால், கடந்த, மூன்று மாதமாக செம்மாண்டம்பாளையம், செம்பாக்கவுண்டம்பாளையம், கருமாபாளையம் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியாமல் உள்ளது. குழிகள் உள்ள பகுதி மூடப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தை எதிர்கொள்கின்றனர்.எனவே, உடைக்கப்பட்ட குழாய்களுக்கு மாற்றாக புதிய குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE