வாகன சோதனையில் பெண் பலாத்காரம்; பணத்தையும் பறித்த போலீஸ்காரர் கைது

Added : நவ 29, 2021 | கருத்துகள் (11)
Advertisement
மதுரை : மதுரையில், இரவு வாகன சோதனையின்போது பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக, போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். மதுரை, வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ், 42; பைப் கடை வைத்துள்ளார். இவரது கடையில், விவாகரத்து ஆன 25 வயது பெண் வேலை செய்கிறார். கடந்த 27ம் தேதி இரவு மகேஷ், அவரது நண்பர் மற்றும் அப்பெண்ணுடன், செல்லுாரில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்த்து திரும்பினார். அதிகாலை 2:30
வாகன சோதனையில் பெண் பலாத்காரம்; பணத்தையும் பறித்த போலீஸ்காரர் கைது

மதுரை : மதுரையில், இரவு வாகன சோதனையின்போது பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக, போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

மதுரை, வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ், 42; பைப் கடை வைத்துள்ளார். இவரது கடையில், விவாகரத்து ஆன 25 வயது பெண் வேலை செய்கிறார். கடந்த 27ம் தேதி இரவு மகேஷ், அவரது நண்பர் மற்றும் அப்பெண்ணுடன், செல்லுாரில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்த்து திரும்பினார். அதிகாலை 2:30 மணிக்கு டவுன் ஹால் ரோடு பகுதியில் மகேஷ், அப்பெண் உட்பட மூவர் டூ - வீலரில் வந்தனர்.

அவர்களை திலகர் திடல் குற்றப்பிரிவு போலீஸ்காரர் முருகன், 41 உட்பட இரண்டு போலீசார் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக மூவரும் பதில் தெரிவித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, சக போலீஸ்காரரை ரயில்வே ஸ்டேஷன் அவுட் போஸ்ட்டிற்கு அனுப்பிவிட்டு முருகன் மட்டும் விசாரித்தார்.


வீட்டிலேயே முடக்கம்


பயந்து போன மகேஷிடம் 11 ஆயிரம் ரூபாயை பறித்தவர், அவரது ஏ.டி.எம்., கார்டு, அலைபேசியையும் பறித்து, அவரையும், நண்பரையும் மிரட்டி அங்கிருந்து அனுப்பினார். பின் அப்பெண்ணிடம் 'உன் நடத்தை குறித்து வீட்டில் தெரிவித்து விடுவேன்' என மிரட்டி, அப்பகுதி விடுதிக்கு அழைத்துச் சென்றார்.

'இவர் என் உறவினர். கொஞ்சம் 'பிரஷ்' ஆகி செல்ல வேண்டும்' எனக் கூறி விடுதியில் 'ஓசி' அறை எடுத்து, அப்பெண்ணை பலாத்காரம் செய்தார். இரு நாட்களாக, அப்பெண் யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். நேற்றும் அவர் கடைக்கு வராததால், மகேஷ் சென்று விசாரித்தபோது, நடந்த சம்பவம் தெரியவந்தது. இதற்கிடையே, இரு நாட்களாக மகேஷ் ஏ.டி.எம்., கார்டில் இருந்து மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக எஸ்.எம்.எஸ்., வந்தது.


சஸ்பெண்ட்


அதிர்ச்சியுற்ற அவர், உடனடியாக அப்பெண்ணுடன் சென்று நேற்று திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் ரவீந்திரநாத் விசாரித்தார். பலாத்கார வழக்கில், முருகனை அனைத்து மகளிர் தெற்கு போலீசார் கைது செய்தனர்.பணியின்போது பெண்ணை பலாத்காரம் செய்து, போலீஸ் துறைக்கே களங்கத்தை ஏற்படுத்திய முருகன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
03-டிச-202113:56:18 IST Report Abuse
Narayanan In this DMK government there is NO security for ladies and even for police. The Law and order completely gone. Best solution to dismiss this government and implement governor rule for TWO years . Than the election could be contacted . Election commission should not permitted to have alliance between the parties. If any party is below the vote that party must be dissolved .
Rate this:
RAVIKUMAR - chennai,இந்தியா
06-டிச-202115:52:10 IST Report Abuse
RAVIKUMARwhat dmk govt to do on this.. ?.. Its a crime done by police man ...ada raagavaa ...raagavaa ..see whom are all speaking about security for ladies...
Rate this:
Cancel
RUPA - KOLKATA,இந்தியா
02-டிச-202114:59:38 IST Report Abuse
RUPA பொம்பளை புள்ளைக்கு என்ன நைட் ஷோ கேக்குது, இரண்டு பேர் கூட போனதால தான் தெரு நாயி எல்லாம் வேண்டாத வேலை செய்யுது .
Rate this:
Cancel
shankar - Coimbatore,இந்தியா
02-டிச-202112:43:17 IST Report Abuse
shankar இரவில் திருடனை விட இவர்களை பார்த்தால்தன் பயமாக இருக்கும்.. மக்களே ஜாக்கிரதை.
Rate this:
Hari - Chennai,இந்தியா
06-டிச-202121:05:55 IST Report Abuse
Hariஉண்மை ஷங்கர் சார். நாம் உண்மையில் பயப்பட வேண்டியது காக்கி உடையில் இருக்கும் இந்த அரக்கர்களை பார்த்துதான் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X