பொது செய்தி

தமிழ்நாடு

'ஒமைக்ரான்' கண்டறியும் வசதி: 12 ஆய்வகங்களில் அறிமுகம்

Updated : டிச 01, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை :தமிழகத்தில், 'ஒமைக்ரான்' வைரசின் சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை கண்டறியவும், பிரத்யேக ஆர்.டி.பி.சி.ஆர்., ஆய்வுகளை மேற்கொள்ளவும், 12 ஆய்வகங்களுக்கு பொது சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. தென் ஆப்ரிக்கா நாட்டில் இம்மாதம் 26ம் தேதி, ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது, பல நாடுகளுக்கு தற்போது பரவியுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ்
'ஒமைக்ரான்' கண்டறியும் வசதி: 12 ஆய்வகங்கள், அறிமுகம்

சென்னை :தமிழகத்தில், 'ஒமைக்ரான்' வைரசின் சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை கண்டறியவும், பிரத்யேக ஆர்.டி.பி.சி.ஆர்., ஆய்வுகளை மேற்கொள்ளவும், 12 ஆய்வகங்களுக்கு பொது சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. தென் ஆப்ரிக்கா நாட்டில் இம்மாதம் 26ம் தேதி, ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

இது, பல நாடுகளுக்கு தற்போது பரவியுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் வைரசின் பாதிப்பை முதற்கட்ட பரிசோதனையில் தெரிந்து கொள்ளும் வகையிலான உபகரணங்களை, 12 ஆய்வகங்களுக்கு

பொது சுகாதாரத்துறை அனுப்பியுள்ளது.
இந்த ஆய்வகங்களில், 'தெர்மோ டெக்பாத்' என்ற கருவி வாயிலாக, மூன்று மணி நேரத்தில் ஒமைக்ரான் போன்ற உருமாறிய வைரஸ் பாதிப்புக்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை கண்டறிய முடியும். ஆய்வகங்களில் யாருக்கெல்லாம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதன் விபரம்:

* ஒமைக்ரான் வைரசின் முதற்கட்ட சாத்தியக் கூறுகளை கண்டறிய, சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், 12 ஆய்வகங்களில் சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகங்களில், தெர்மோ டெக்பாத் என்ற நவீன கருவி வாயிலாக பரிசோதிக்க வேண்டும்
* மீண்டும் தொற்று ஏற்பட்டவர்கள், கொரோனா தடுப்பூசிக்கு பின் தொற்று ஏற்பட்டவர்கள், நிகழ்ச்சி வாயிலாக சமுதாய தொற்று மற்றும் குடும்ப தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இக்கருவி வாயிலாக பரிசோதனை செய்ய வேண்டும்
* தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள், சிறார்கள், நுரையீரல் பாதிப்பு உள்ளோர், தீவிர பாதிப்பில் இருப்பவர்கள், கொரோனா தொற்றுடன் இதர நோய்களின் பாதிப்பில் இறந்தவர்கள், சர்வதேச பயணியர் போன்றவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் டெக்பாத் கருவியின் வாயிலாக பரிசோதிக்க வேண்டும்
* இந்த பரிசோதனையில், கொரோனா வைரசில் உருமாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகளை மட்டுமே, மூன்று மணி நேரத்தில் முடிவு
களாக வரும்.

அவ்வாறு சாத்தியக்கூறுகள் இருந்தால், அவற்றை சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள மாநில மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும்.
அங்கு, ஏழு நாட்களில் ஒமைக்ரான் போன்ற உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்படும்* சாத்தியக் கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டவர்களை, மரபணு பரிசோதனை முடிவுகள் வரும் வரை, கட்டாயம் தனிமையில் வைக்க வேண்டும்.
இதேபோல, தனியார் மருத்துவமனைகளும் டெக்பாத் கருவி பயன்படுத்தி, பரிசோதனை மேற்கொள்ளலாம்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


12 நாடுகளில் இருந்து வருவோருக்கு பரிசோதனை'ஒமைக்ரான்' தமிழகத்தில் பரவாமல் இருக்க, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் விபரம்:
* தென் ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், பிரேசில், வங்கதேசம், மொரீஷியஸ் உட்பட 12 நாடுகளில் இருந்து வரும் பயணியர், தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்டிப்பாக ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்ய வேண்டும். 'நெகட்டிவ்' முடிவு வந்தால் மட்டுமே வீடுகளுக்கு செல்லலாம்


* அவர்களும் ஏழு நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எட்டாம் நாள் மறுபடியும் பரிசோதனை செய்ய வேண்டும்.
'நெகட்டிவ்' முடிவு வந்த பின், அடுத்த ஏழு நாட்களுக்கு தாமாக உடல்நிலையை கண்காணிக்க வேண்டும்.

* பயணியர் எவருக்கேனும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
மாதிரிகள் முழு மரபணு வரிசைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டு, உருமாற்றம் உள்ளதா என கண்டறியப்படும்
* அறிவிக்கப்பட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணியர், தமிழகத்திற்கு வந்த 14 நாட்களுக்குள், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்
அல்லது மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையம் அல்லது 104 இலவச மருத்துவ உதவி எண்ணை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்க வேணடும்
* அவர்களுடன் தொடர்பில் இருந்தோரை கண்டறிந்து, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணியரில், 5 சதவீதத்தினருக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்த விபரம் அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.


தலைமை செயலர் ஆலோசனைதமிழக தலைமை செயலர் இறையன்பு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒமைக்ரான் உருமாற்றம் தொடர்பாக, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றார்.
அத்துடன், 'சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு அல்லது கிருமிநாசினியால் சுத்தம் செய்தல் போன்ற தொடர் தடுப்பு நடவடிக்கைகளை, பொதுமக்கள் அன்றாடம் பின்பற்ற வேண்டும்' என்றும் வேண்டுகோள் விடுத்தார்.இக்கூட்டத்தில், டி.ஜி.பி., சைலேந்திரபாபு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் ராதா
கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponsingh nadar - doha,கத்தார்
30-நவ-202111:38:32 IST Report Abuse
ponsingh nadar என்ன தான் நடக்கிறது உலகத்தில்? ஒமைக்ரான்' என்று சொன்ன உடன் மதுரை ,திருச்சி என்று எல்லா இடத்திலும் செக் பண்ண முடியும் என்றால் திட்டமிட்டே எல்லாம் நடக்கிறது மக்களே, புரிந்து கொள்ளுங்கள். முதலில் உலக சுகாதார அமைப்பு என்று ஒன்று இருக்க கூடாது, சீனா உடன் சேர்ந்து உலகத்தை ஏமாற்றுகிறான். மக்களே ஒன்று படுங்கள்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202107:53:52 IST Report Abuse
Kasimani Baskaran உறுமாறிய வைரஸின் டிஎன்ஏ வை வரிசைப்படுத்தி பலரது மாதிரிகளை சேகரித்து அவர்களுக்கும் அதே வைரஸ் ஸ்டெயின்தான் வந்திருக்கிறது என்று சொல்ல இரண்டு வாரம் ஆகும். ஆனால் உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானத்தை மிஞ்சி சில நாட்களுக்குள் இதையெல்லாம் செய்கிறது பெரும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. உலக சுகாதார அமைப்பை சீனா கட்டுப்படுத்தினால் இதைவிட மோசமான பல கேவலங்கள் அறங்கேறும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X