கேரளா மாடலில் மது விற்பனை; டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்| Dinamalar

கேரளா 'மாடலில்' மது விற்பனை; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்

Added : நவ 29, 2021 | |
சென்னை : கேரளாவில் மது வகைகள் விற்பது போல, தமிழகத்திலும் செயல்படுத்தக் கோரி, தமிழக அரசின் டாஸ்மாக் ஊழியர்கள், மாநிலம் முழுதும் நேற்று மதுக் கடைகள் முன் போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தனசேகரன் கூறியதாவது: 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரையில் மது விற்பனையை துவக்கி, 19வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு

சென்னை : கேரளாவில் மது வகைகள் விற்பது போல, தமிழகத்திலும் செயல்படுத்தக் கோரி, தமிழக அரசின் டாஸ்மாக் ஊழியர்கள், மாநிலம் முழுதும் நேற்று மதுக் கடைகள் முன் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தனசேகரன் கூறியதாவது: 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரையில் மது விற்பனையை துவக்கி, 19வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மதுக்கடை ஊழியர்களுக்கு குறைந்த தொகுப்பூதியமே வழங்கப்படுகிறது. தமிழகத்தை போல கேரளாவிலும், மதுக் கடைகளை அரசே நடத்துகிறது.

அம்மாநிலத்தில் உள்ள மதுக் கடைகளில் மது வாங்க செல்வோர், முதலில் கவுண்டருக்கு சென்று பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். அதை வேறொரு கவுண்டரில் கொடுத்து மது வாங்க வேண்டும். இதனால், கடைகளில் கூட்டம் கூடுவதில்லை.உடையும் பாட்டில் இழப்பீடு, லாரியில் வரும் மது பெட்டிகள் இறக்கு கூலி போன்ற செலவினங்களை அரசே வழங்குகிறது. மதுக் கடை ஊழியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கப்படுகிறது.

எனவே, கேரளாவில் இருப்பது போல தமிழகத்திலும், மது விற்பனையை செயல்படுத்துவதுடன், கடை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X