எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்: அடித்து சொல்கிறார் அன்வர் ராஜா

Updated : டிச 01, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
''நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டால் கட்டாயம் வெற்றி பெறும்,'' என, அக்கட்சியின் முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா கூறினார்.அவரது சிறப்பு பேட்டி: சசிகலாவை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டு தான், அரசியல் செய்ய வேண்டும் என்று கூறி வருகிறீர்களே? தலைமை நிலைய நிர்வாகிகள் கூடி முடிவெடுக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதை நான் வழி
 அ.தி.மு.க., தனித்து போட்டி,வெற்றி, அன்வர் ராஜா

''நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டால் கட்டாயம் வெற்றி பெறும்,'' என, அக்கட்சியின் முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா கூறினார்.

அவரது சிறப்பு பேட்டி:



சசிகலாவை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டு தான், அரசியல் செய்ய வேண்டும் என்று கூறி வருகிறீர்களே?



தலைமை நிலைய நிர்வாகிகள் கூடி முடிவெடுக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதை நான் வழி மொழிந்தேன்; அவ்வளவு தான்.



அ.ம.மு.க.,வை அ.தி.மு.க., உடன் இணைக்கச் சொல்கிறீர்களா?


அ.ம.மு.க., 3 சதவீதத்துக்கும் கூடுதலான ஓட்டுகளை வாங்கி உள்ளது. அந்தக் கட்சியும் சேரும் போது, அ.தி.மு.க.,வுக்கு கூடுதல் பலம் தான்.




சசிகலாவை, பழனிசாமி கடுமையாக எதிர்க்கும் நிலையில், சசிகலா ஆதரவு குரல் எடுபடுமா?


எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். பன்னீர்செல்வம் முதல்வர் பதவி யில் இருந்து இறங்கிய நிலையில், பழனிசாமியை முதல்வர் ஆக்கியவர் சசிகலா. அந்த நேரத்தில், சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியவர் பன்னீர்செல்வம். இன்றைக்கு பன்னீர்செல்வம், சசிகலாவை அ.தி.மு.க.,வில் இணைக்க வேண்டும் என்கிறார்; இது தான் அரசியல்.


சசிகலாவுக்கு ஏன் இவ்வளவு துாரம் வால் பிடிக்கிறீர்கள்?


அவரை நேரில் சந்தித்த காலங்களில், ஒரே ஒரு முறை தான் பேசியிருக்கிறேன். மற்றபடி பார்ப்பேன்; பேசியதில்லை. யாரோடும் எனக்கு எந்த பகையும் இல்லை.


மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சண்முகம் உங்களை அடிக்கப் பாய்ந்தது ஏன்?


'சசிகலாவுக்கு ஆதரவாக பேசும் உங்களை அடிக்க, பழனிசாமி ஆள் அனுப்பி இருக்கிறார்' என ஒருவன் போனில் பேசினான். அப்பத்தான், 'பழனிசாமி தன்னை இன்னொரு எம்.ஜி.ஆராக நினைத்து கொண்டிருக்கிறார்' என்பதை குறிப்பிடும் போது, 'கொண்டிருக்கிறான்' என பேச்சு வாக்கில் கூறி விட்டேன்.அதை பதிவெடுத்து, வெளியில் பரப்பி, என்னை சிக்கலில் ஆழ்த்தி விட்டதாக நினைக்கின்றனர்; ஒருமையில் விமர்சித்ததாக கூறுகின்றனர். 'டங் ஸ்லிப்'பில் நடந்ததை சுட்டிக்காட்டிய உடன், மன்னிப்பும் கோரி விட்டேன். ஆனாலும், இதை பெரிய விஷயமாக்கி சிலர், மா.செ.,க்கள் கூட்டத்தில் வம்புக்கு வந்தனர்.


சசிகலாவுக்கு எதிராக கட்சியினர் இருப்பது ஏன்?


அவர் தனக்கு வேண்டப்பட்டவர்களை பதவிக்கும், பொறுப்புக்கும் கொண்டு வந்து விடுவார் என்கின்றனர். அப்படி செய்ய மாட்டார் என்பது என் கணிப்பு.


நீங்கள் பா.ஜ.,வை தனிப்பட்ட முறையில் எதிர்ப்பதை, உங்கள் கட்சி தலைவர்கள் விரும்பவில்லையாமே?


பா.ஜ.,வை சித்தாந்த ரீதியில் எதிர்க்கிறோம். ஆனால், தமிழக நலன்களுக்காக, மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை ஆதரிக்கிறோம்.


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட வேண்டும் என்று எதை வைத்து வலியுறுத்துகிறீர்கள்?

அ.தி.மு.க.,வுக்கு இப்போதைய பிரச்னையே, சிறுபான்மையின ஓட்டுக்களை இழந்தது தான். தனித்து போட்டியிட்டால், அந்த ஓட்டுக்கள் தானாகவே அ.தி.மு.க., பக்கம் வந்து விடும்.


தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி நாங்கள் தான் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சொல்கிறாரே?

தி.மு.க.,வுக்கு உண்மையான எதிர்க்கட்சியாக, அ.தி.மு.க., தான் இருக்க வேண்டும் என மக்கள்

விரும்புகின்றனர். பா.ஜ., வை அ.தி.மு.க., தான் சுமந்து செல்கிறது என்பதை அவர் உணர வேண்டும்.


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?



அ.தி.மு.க., வலிமையாக போராடினால், பெரிய வெற்றியை பெற முடியும்.


தனித்து போட்டியிட வேண்டும் என மா.செ.,க்கள் கூட்டத்தில் வலியுறுத்திய போது, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை குறிப்பிட்டு பேசினீர்களாமே?


உ.பி., சட்டசபை தேர்தல் மற்றும் 2024 லோக்சபா தேர்தலுக்காக பிரதமர் மோடி, வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற்று, விவசாயிகளிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார். பிரதமர் மோடியே, வெற்றிக்காக தன் நிலைப்பாட்டை மாற்றும் போது, நாமும் வெற்றிக்காக நிலைப் பாட்டை மாற்றி, தனித்து போட்டியிடுவதில் தவறில்லை என்று பேசினேன்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
30-நவ-202111:37:52 IST Report Abuse
Matt P ஒருத்தர் நம்மை அடிக்க ஆள் அனுப்பியிருக்கிறார் என்று தெரிந்தபோது யாரும் .....நினைத்து கொண்டிருக்கிறான் என்று ஒருமையில் கோபத்தில் சொல்வது மனதின் அடித்தளத்தில் இருந்து வருவது தான். இதில் நாக்கு நழுவல் ஒன்றும் இல்லை. இருந்தாலும் அடிக்க ஆள் அனுப்பும் அரசியல் மாறுவது நல்லது.
Rate this:
Cancel
Sri - Ghisin,கோஸ்டாரிகா
30-நவ-202108:09:15 IST Report Abuse
Sri திமுக ஆள் நிறைய ஊதுகுழல் எல்லா இடங்களிலும் உள்ளது
Rate this:
Cancel
Sri - Ghisin,கோஸ்டாரிகா
30-நவ-202108:09:15 IST Report Abuse
Sri திமுக ஆள் நிறைய ஊதுகுழல் எல்லா இடங்களிலும் உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X