பொது செய்தி

தமிழ்நாடு

உருவாகிறது இரு காற்றழுத்த தாழ்வு :2 மாவட்டங்களில் இன்று கன மழை

Updated : நவ 30, 2021 | Added : நவ 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை :வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில், இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் இன்றும், நாளையும் உருவாகின்றன. அதேநேரத்தில், இன்றும், நாளையும் இரு மாவட்டங்கள் தவிர, மற்ற பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
 உருவாகிறது இரு காற்றழுத்த தாழ்வு :2 மாவட்டங்களில் இன்று கன மழை

சென்னை :வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில், இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் இன்றும், நாளையும் உருவாகின்றன. அதேநேரத்தில், இன்றும், நாளையும் இரு மாவட்டங்கள் தவிர, மற்ற பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி:
குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தெற்கு அந்தமான் பகுதிஇன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழையும்; மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். சென்னையில் கன மழை குறையும் என்றாலும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.


latest tamil news



நாளையும், நாளை மறுதினமும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தெற்கு அந்தமான் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இரண்டு நாட்களுக்குள் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இந்த தாழ்வு மண்டலம் கரையை
உருவாகிறது கடக்கும் இடம் குறித்து, அடுத்து வரும் நாட்களில் தான் தெரியும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று தெற்கு அந்தமான் பகுதியிலும்; நாளை தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

அதேபோல, அரபிக்கடலின் கிழக்கு மத்திய பகுதியிலும், புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. இது வலுப்பெற்று மஹாராஷ்டிரா அருகே நகர்ந்து செல்லும். இந்த காற்றழுத்த பகுதியால், தமிழகத்துக்கு மழை வாய்ப்பு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக கடலுாரில் 17 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி 16; ஊத்துக்கோட்டை 12; புதுச்சேரி 11, மாமல்லபுரம் 10; திருத்தணி, பாபநாசம், காவேரிப்பாக்கம் 9; திருக்குவளை 8; உளுந்துார்பேட்டை, செங்குன்றம், மயிலாடுதுறை, சென்னை விமான நிலையம் 7 செ.மீ., மழை பெய்துள்ளது.


சென்னையை விட நாகையில் மழை அதிகம்



இந்த பருவமழை காலத்தில், சென்னையில் மழை நீர் வழிந்தோட வழியின்றி, பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் தான் அதிக மழை பெய்துள்ளதாக தகவல் பரவுகிறது. ஆனால், வானிலை ஆய்வு மைய புள்ளி விபரப்படி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் நாகையில் தான் அதிக மழை பதிவாகி
உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அக்டோபர் ௧ முதல் நேற்று வரை 63 செ.மீ., மழை பெய்துஉள்ளது. இது இயல்பான 35 செ.மீ., அளவை விட, 80 சதவீதம் அதிகம்.இந்த பருவ மழை காலத்தில் இதுவரை மயிலாடுதுறை 102; கடலுார் 108; விழுப்புரம் 110; செங்கல்பட்டு 111; சென்னை 113; நாகை 114; காரைக்கால் 144; புதுச்சேரி 141 செ.மீ., என, எட்டு மாவட்டங்களில் 100 செ.மீ.,க்கு மேல் மழை பதிவாகியுள்ளது.
இரு மாநிலங்களிலும் அதிகபட்சமாக காரைக்காலில் 144; இரண்டாவதாக புதுச்சேரியில் 141 செ.மீ., மழை பெய்துள்ளது. மூன்றாவதாக நாகப்பட்டினத்தில் 114 செ.மீ., மழை பெய்துள்ளது. காரைக்கால், புதுச்சேரி மற்றும் நாகை முறையே மூன்று அதிகபட்ச மழை அளவுள்ள மாவட்டங்களாக உள்ளன.


2015ஐ விட குறைவு



சென்னையில் இந்த பருவ காலத்தில், 113 செ.மீ., மழை பெய்துள்ளது. இது இயல்பான 61 செ.மீ., அளவை விட, 83 சதவீதம் அதிகம். கடந்த, 2015ம் ஆண்டில் சென்னையில் அக்., - நவ., மாதங்களில் 161 செ.மீ., மழை பெய்தது. எனவே, வட கிழக்கு பருவ காலத்தில் 2015 மழை தான், இந்த ஆண்டை விட அதிகபட்ச மழையாகும்.
சென்னையில் இந்த ஆண்டு நவம்பரில் நேற்று வரை 91 செ.மீ., மழை பெய்துள்ளது; 2015ல் 105 செ.மீ., வரை மழை பெய்தது. இதற்கு முன் 1918ல், 109 செ.மீ., மழை பெய்துள்ளது. எனவே, 1918க்கு பின், 2015ம் ஆண்டு தான் அதிகபட்ச மழை பெய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
30-நவ-202104:12:21 IST Report Abuse
Siva Kumar 2015 ல் பெய்த மழையை விட இப்போது மிக குறைவு . இத்தனை நாட்கள் அதிமுகவை குறை பேசியே ஆட்சியை பிடித்த தீமுக இபோது கால்வாயக்களை தூர் வாரி விட்டோம் இந்த முறை மழையினால் சென்னை பாதிக்க படாது என்று வேலை செய்யாமல் பொய் சொல்லி ஏமாற்றி விட்டார்கள். இவர்கள் கொடுக்கும் நிவாரணம் எந்த குடும்பத்திற்க்காவது போதுமா? இனிமேலாவது தீமுகவை நம்பி மக்கள் ஏமாறாமல் இருந்தால் சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X