கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: சட்டம் ஓர் இருட்டறை!

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.ராமன், களக்காடு, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது' என்பது நம் நீதித் துறையின் கொள்கை.ஆயினும் நடைமுறையில், குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர்; அப்பாவிகள்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
latest tamil news


எஸ்.ராமன், களக்காடு, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது' என்பது நம் நீதித் துறையின் கொள்கை.

ஆயினும் நடைமுறையில், குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர்; அப்பாவிகள் தண்டிக்கப்படுகின்றனர். கடந்த 1991ல், மதுரை பாண்டியம்மாள் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட, அவரின் கணவன் அர்ஜுனனை சொல்லலாம்.


latest tamil news


ஓரிரு ஆண்டுகள் அல்ல; 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அர்ஜுனன் அனுபவித்த போது, பாண்டியம்மாள் உயிரோடு வந்து நீதிமன்றம் முன் நின்றார். கைது செய்யப்படுபவர் எல்லாம், குற்றவாளி அல்ல; குற்றம் சாட்டப்பட்டவர் அவ்வளவு தான்.

அதனால் தான் நீதிமன்றம், சம்பந்தப்பட்டவருக்கு ஜாமின் வழங்குகிறது. இந்த ஜாமின் நடைமுறை, குற்றவாளிகளுக்கு அனுசரணையாக உள்ளது. வழக்கு விசாரணையை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பதற்கும், சாட்சிகளை மிரட்டி கலைப்பதற்கும், தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கும் தான், ஜாமின் பெரும் உதவியாக உள்ளது.

சிறார் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இச்சட்டத்தில், உச்சபட்ச தண்டனையாக துாக்கு தண்டனை விதிக்க முடியும்.

மாணவியரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆசிரியருக்கு ஆதரவாகவே, பெரும்பாலும் பள்ளி நிர்வாகத்தினர், தலைமை ஆசிரியர் ஆகியோர் நடந்து கொள்கின்றனர்.

குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறி, அவர்களையும் போலீசார் கைது செய்கின்றனர்; ஆனால், அவர்கள் உடனடியாக ஜாமின் பெற்று, வெளியே வந்து விடுகின்றனர்.

கோவையைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி, சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டனர்.

இதில், மீரா ஜாக்சனுக்கு, நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. அரியலுார் மாவட்டம் காட்டுபிரிங்கியம் கிராம அரசு பள்ளியில் பணிபுரியும் அருள் செல்வன் என்ற ஆசிரியர், 10ம் வகுப்பு மாணவி ஒருவரை சீண்டி, சில்மிஷம் செய்திருக்கிறார்.

இது குறித்து அந்த மாணவி, பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியிடம் புகார் அளித்தும், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. புகாரின்படி, அருள்செல்வனையும், ராஜேஸ்வரியையும், 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ராஜேஸ்வரிக்கு, நீதிமன்றம் ஜாமின் வழங்கவில்லை. குற்றம் ஒன்று தான். அதில் ஒருவருக்கு ஜாமின் வழங்குவதும், இன்னொருவருக்கு மறுப்பதும் ஏன் என விளங்கவில்லை. சட்டம் ஓர் இருட்டறை என்பது இது தானா?


Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
30-நவ-202116:32:41 IST Report Abuse
Samathuvan //சட்டம் ஒரு இருட்டறை// இது எல்லாம் நமக்கு பார்த்து பழகி போய்விட்ட விஷயங்கள். சட்டம் இயற்றியதில் குறை பாடு என்ன இருக்கமுடியும்?. அது எவன் கையில் உள்ளது என்பதுதான் பணமுல்ல இடத்திலா ? அரசியல் வாதிகளிடமா ? ஆளுமைகளிடமா? இதில் எல்லா மதங்களும் அடக்கம் இதற்க்கு எந்த சாயமும் பூச முடியாது. இங்கு தனி நபராக மட்டும் தான் பார்க்கிறோம் அதுவும் அருகாமையிலும் நமது வேண்டியப்பட்ட நபர்களுககு நிகழ்ந்தால் மட்டுமே ஏன் ? ஒரு சர்வாதிகார தன்மையால் ஒரு சமூகத்தையே ஒதுக்குவதில்லையா இந்த அரசாங்கம் அல்லது சுதந்திரம் அடைந்த பின்பும் அடுத்தவன் இன்னும் நம்மை அடக்கி ஆளவில்லையா நாமும் இன்னும் அடஙகி போவதில்லையா அது போலத்தான். முன்னேறிய நாடுகளில் எவனும் இந்த மத, ஜாதி குப்பைகளை சுமக்காமல் மேலும் முன்னேறி கொண்டே இருக்கிறான். நாம் மட்டும்தான் இந்த குப்பைகளை நாமும் சுமந்து அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து வைத்து கொண்டு இருக்கிறோம் எல் ஐ சி பாலிசி போல. அடலீஸ்ட் இதுமாதிரி உண்மையில் நடக்காது என்று தெரிந்தும் ஆதங்கத்தினால் கற்பனை படத்தை பார்த்து சந்தோச படலாமுன்னா அதையும் கெடுக்கறதுக்கு நாலு பேரு கெளம்பிடுறானுங்க. ஹூம் அம்புட்டுதான் நாம் என்ன திருந்தவா போறோம் இதுக்கெல்லாம் ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டு.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
30-நவ-202115:30:48 IST Report Abuse
r.sundaram சட்டம் ஒரு இருட்டறை மட்டும் அல்ல, அந்த இருட்டறைக்குள் என்னவெல்லாமோ நடக்கிறது என்பதே உண்மை. சமீபத்தில் பதவி மூப்பு அடைந்த இரு உய்ரநீதிமன்ற நீதிபதிகள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதற்க்கு உதாரணம். ஆதலால் பணம் உண்டானால் நீதி, இல்லை என்றால் அநீதி என்பதே உண்மையாக இருக்கிறது. அரசியல் சட்டத்தை ஏறிப்போம் என்று கொளுத்தி விட்டு, வெறும் தாள்களை மட்டுமே கொளுத்தினோம் என்று சொன்னதை நம்பியதும் நமது நீதிமன்றங்கள் தான்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
30-நவ-202113:35:50 IST Report Abuse
 N.Purushothaman சட்டம் இந்துக்களுக்கு இருட்டறை ...வந்தேறிகளுக்கு மெழுகுவத்தி ஏற்றி வெளிச்சம் மிக்க காற்றோட்டமான அறை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X