52 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரி கிடா வெட்டி பூஜை செய்த மக்கள்| Dinamalar

52 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரி கிடா வெட்டி பூஜை செய்த மக்கள்

Added : நவ 30, 2021 | கருத்துகள் (9) | |
திருவண்ணாமலை :போளூர் அருகே 52 ஆண்டுகளுக்கு பின் சோத்துகன்னி ஏரி நிரம்பியதால் மகிழச்சி அடைந்த மக்கள், கிடா வெட்டி பூஜை செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கன மழையால் அங்குள்ள 106 ஏரிகளில், 103 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. சோத்துக்கன்னி ஏரி முழுமையாக நிரம்பி நேற்று மறுகால் போனது. 52 ஆண்டுகளுக்கு பின் ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த 1969ம்
52 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரி கிடா வெட்டி  பூஜை செய்த மக்கள்

திருவண்ணாமலை :போளூர் அருகே 52 ஆண்டுகளுக்கு பின் சோத்துகன்னி ஏரி நிரம்பியதால் மகிழச்சி அடைந்த மக்கள், கிடா வெட்டி பூஜை செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கன மழையால் அங்குள்ள 106 ஏரிகளில், 103 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
சோத்துக்கன்னி ஏரி முழுமையாக நிரம்பி நேற்று மறுகால் போனது. 52 ஆண்டுகளுக்கு பின் ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த 1969ம் ஆண்டுக்கு பின் இந்த ஏரி நிரம்பியுள்ளது. இதையடுத்து, கிராம மக்கள் மேளதாளத்துடன் ஏரிக்கு சென்று, கிடா வெட்டி பூஜை செய்தனர்.


 பெரம்பலுார் மாவட்டம், களரம்பட்டி கிராமத்தில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பியது. 2006ல் நிரம்பிய ஏரி, தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி உள்ளது. அதை கொண்டாடும் வகையில் களரம்பட்டி மற்றும் அம்மாபாளையம் கிராம மக்கள் நேற்று ஏரியில் திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, பொதுமக்கள் குத்தாட்டம் போட்டனர். ஏரியில் மலர்கள் துாவப்பட்டன.
பட்டாசு வெடித்து, பொங்கல் வைத்து, கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் செய்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X