இந்தியா

பெரியாறு வழக்கில் புதிய மனு; தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி :முல்லை பெரியாறு அணைக்கு மத்திய படை பாதுகாப்பு அளிக்கக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. கேரள மாநிலம் இடுக்கியில் 1895ல் கட்டப்பட்டது முல்லை பெரியாறு அணை. இதன் பராமரிப்பு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணையில் நீரைத் தேக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.'முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகம் -- கேரளா
பெரியாறு வழக்கு, புதிய மனு தள்ளுபடி,சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி :முல்லை பெரியாறு அணைக்கு மத்திய படை பாதுகாப்பு அளிக்கக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. கேரள மாநிலம் இடுக்கியில் 1895ல் கட்டப்பட்டது முல்லை பெரியாறு அணை.

இதன் பராமரிப்பு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணையில் நீரைத் தேக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

'முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகம் -- கேரளா இடையே நிலவி வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் இறுதி தீர்வு காணும் வழக்கு அடுத்த மாதம் 10ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மனுதாரர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதன் விபரம்:

முல்லை பெரியாறு அணையை பயன்பாட்டில் இருந்து நீக்க, கேரளா தரப்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மீது போராட்டக்காரர்கள் அழுத்தம் கொடுக்க துவங்கி உள்ளனர். மேலும் புதிய அணை கட்டவும் கோரிக்கை வலுத்து வருகின்றன.
எனவே, முல்லை பெரியாறு அணைக்கு மத்திய படை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரப்பட்டது.


latest tamil news




இந்த மனு, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிகுமார் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயா சுகின், ''அணையின் நீர்மட்ட அச்சுறுத்தல் குறித்து தேசிய அல்லது சர்வதேச நிபுணர் குழுக்கள் கருத்து எதுவும் கூறவில்லை. ''எனவே, இந்த மனு தொடர்பாக, 'நோட்டீஸ்' அளித்து, நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும்,'' என, வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:முல்லை பெரியாறு வழக்கு விசாரணை விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 10ல் இறுதி தீர்வு காணப்படும். அப்படியிருக்கையில் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது ஏன்?
நீங்கள் இப்படி செய்வதால் பல தனி நபர்களும் மனு தாக்கல் செய்யக் கூடும். எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது. முக்கிய வழக்கு விசாரணைக்கு வரும் போது அனைத்து பிரச்னைகளும் பரிசீலிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202106:27:36 IST Report Abuse
Kasimani Baskaran சட்டப்படி அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில். தமிழக அரசு திமுகவின் கட்டுப்பாட்டில். அச்சன்கள் அணையை தன்னிச்சையாக கூட திறந்தாலும் ஓகே. ஆக தமிழக நலனெல்லாம் முக்கியமில்லை. மரம் வெட்ட மனுக்கொடுப்பார்கள். கோமாளித்தனம் செய்ய தயங்கவே மாட்டார்கள். கமிசனுக்கு அணையை உடைக்க அனுமதித்தாலும் அனுமதிக்கலாம். எதற்கும் கரையோரப்பகுதியில் வசிப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
Rate this:
S.Pandiarajan - tirupur,இந்தியா
30-நவ-202107:55:46 IST Report Abuse
S.Pandiarajanஎப்படி கொடநாட்டான் பத்தரை பெர்சன்ட் வன்னியருக்கு கொடுத்து கோர்ட் தள்ளுபடி செய்து கோமாளிக்கூத்து அடுத்து வேளாண் சட்டம் வாபஸ் மோடியின் கோமாளி இதை என்னசொல்வது ஊசிமணி...
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202108:27:55 IST Report Abuse
Kasimani Baskaranசு. பாண்டி... அணையை அச்சன்கள் தன்னிச்சையாக திறந்தது உண்மையா இல்லையா என்று எழுதுவதை விட்டுவிட்டு ஊசிமணி என்று பெயரை எழுதி கேவலப்படுத்தியதாக நினைக்க வேண்டாம். உங்களது தராதரம் பல்லிளித்து பல காலம் ஆகிவிட்டது....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202105:39:10 IST Report Abuse
J.V. Iyer இரண்டும் இரண்டாப்பை, இரண்டும் கழண்டாப்பை. இரண்டு மாநில ஒன்றீய அரசுகள்
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202108:40:05 IST Report Abuse
Kasimani Baskaranஅய்யிரே... அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது எப்படி அடுத்த மாநிலத்தில் உள்ள அதிகாரிகள் தன்னிச்சையாக திறந்தார்கள் என்று ஒரு ஒரூ கேள்வி கூட கேட்கத்தோன்றவில்லையா இல்லை மோடி எதிர்ப்புதான் கண்ணை மறைக்கிறதா? கேலாங்கில் ஆமைக்கறி சூப் கிடைக்கிறதாம். சூப் குடித்து சிந்தித்து தெளிவாக கறுத்து எழுதவும்......
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-நவ-202104:19:18 IST Report Abuse
Natarajan Ramanathan பேசாமல் முல்லைபெரியார் அணையின் பாதுகாப்பை பாண்டிச்சேரி போலீஸ்வசம் ஒப்படைத்து விடலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X