பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளிக்கு அடுத்து கத்தரிக்காய் விலை எகிறியது

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : தக்காளியை தொடர்ந்து கத்தரிக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களில், கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.மழை மற்றும் குளிர்காலங்களில் கத்தரிக்காய் விற்பனை அதிகரிக்கும். தற்போது மழைக்காலம் என்பதால்,

சென்னை : தக்காளியை தொடர்ந்து கத்தரிக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



latest tamil news


தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களில், கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.மழை மற்றும் குளிர்காலங்களில் கத்தரிக்காய் விற்பனை அதிகரிக்கும். தற்போது மழைக்காலம் என்பதால், கத்தரிக்காய் தேவை அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், மழையால் தமிழகம் முழுதும் கத்தரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், அவற்றின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. சமீபத்தில் இதேபோன்ற நிலை தக்காளிக்கும் ஏற்பட்டது.


latest tamil news



இதனால், கிலோ தக்காளி 150 முதல் 180 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது தக்காளி விலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கத்தரிக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை மார்க்கெட்டில், கிலோ முதல்தர கத்தரிக்காய் நேற்று 70 முதல் 80 ரூபாய் வரையும்; இரண்டாம் தர கத்தரிக்காய் 60 முதல் 80 ரூபாய் வரையும் விற்கப்பட்டன.

இவற்றை வாங்கிச் சென்ற சில்லரை வியாபாரிகள், கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்தனர். கத்தரிக்காய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
30-நவ-202112:22:53 IST Report Abuse
raja விடியலு வேளாண்துறை அமைச்சனும் அதுக்கு ஒரு குழுவும் போட்டான்...... என்ன செய்யிறானுவோ....
Rate this:
RAVIKUMAR - chennai,இந்தியா
30-நவ-202118:07:06 IST Report Abuse
RAVIKUMAR.மழை முடிஞ்சாதாண் கத்திரிக்கா காய்க்கும் ...அதுவரைக்கும் வெயிட் பண்ணு...
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
30-நவ-202106:43:18 IST Report Abuse
கௌடில்யன் போராட்டம் ஏதாவது நடக்குமா ..
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202105:58:35 IST Report Abuse
Kasimani Baskaran அடிமைகள் உட்ப்பட திமுக ஆட்சியில் அனைத்தும் சிமிண்ட் எகிறியது போல எகிறும். ஓட்டுப்போட்டுவிட்டு குத்துதே கொடையுதே என்று புலம்புவதில் அர்த்தமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X