பொது செய்தி

தமிழ்நாடு

இன்று கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021
Share
Advertisement
சென்னை : வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் இன்று(நவ.,30) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது


சென்னை : வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் இன்று(நவ.,30) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news



சென்னையை பொறுத்தவரை



அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை




வங்க கடல் பகுதிகள்


தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் காற்று வீசும். மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X