பொது செய்தி

தமிழ்நாடு

12 நாடுகளில் இருந்து வருவோருக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : 'ஒமைக்ரான்' தமிழகத்தில் பரவாமல் இருக்க, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் விபரம்: தென் ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், பிரேசில், வங்கதேசம், மொரீஷியஸ் உட்பட 12 நாடுகளில் இருந்து வரும் பயணியர், தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்டிப்பாக ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்ய


சென்னை : 'ஒமைக்ரான்' தமிழகத்தில் பரவாமல் இருக்க, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் விபரம்: தென் ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், பிரேசில், வங்கதேசம், மொரீஷியஸ் உட்பட 12 நாடுகளில் இருந்து வரும் பயணியர், தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்டிப்பாக ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்ய வேண்டும்.latest tamil news'நெகட்டிவ்' முடிவு வந்தால் மட்டுமே வீடுகளுக்கு செல்லலாம். அவர்களும் ஏழு நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எட்டாம் நாள் மறுபடியும் பரிசோதனை செய்ய வேண்டும். 'நெகட்டிவ்' முடிவு வந்த பின், அடுத்த ஏழு நாட்களுக்கு தாமாக உடல்நிலையை கண்காணிக்க வேண்டும்.

பயணியர் எவருக்கேனும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மாதிரிகள் முழு மரபணு வரிசைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டு, உருமாற்றம் உள்ளதா என கண்டறியப்படும்.


latest tamil newsஅறிவிக்கப்பட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணியர், தமிழகத்திற்கு வந்த 14 நாட்களுக்குள், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையம் அல்லது 104 இலவச மருத்துவ உதவி எண்ணை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்க வேணடும்.


அவர்களுடன் தொடர்பில் இருந்தோரை கண்டறிந்து, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணியரில், 5 சதவீதத்தினருக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்ய வேண்டும். இந்த விபரம் அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
30-நவ-202108:40:43 IST Report Abuse
elakkumanan நண்பர்களே, இதே போன்ற ஒரு மிரட்டலை இந்திய அரசும் எதிரி கொண்டது.. மீடியா ஆட்கள் வாயிலாக சில பல போட்டோக்கள்.. அரசியல் கும்பலும் அதற்க்கு வக்காலத்து.. வெளிநாட்டு ஊசியை கொள்முதல் பண்ண மாநிலத்துக்கு அதிகாரம் வேண்டும் என்று ஒரு கும்பல் கூவுச்சு...கேசரி, பிச்சை,...இப்போ, யாரும் கூவுவதில்லை.... காரணம், அந்த கூவல், எஜமானை குஷிப்படுத்த அடிமைகளின் கூவல்...இப்போ, பைசர் எசமான் ஆப்பிரிக்காவுக்கு யாவாரம் பாக்க போயிருக்கார்.. இப்பிடி, ஊரை அடித்து, மிரட்டி, ஏய்த்து சம்பாரித்தால், ஒரு காலத்தில், அவன் பாவியாக அடியாளப்படுத்தப்பட்டான். இப்போ, சாமர்த்தியசாலி, யாவாரா தந்திரம், சாணக்யத்தனம், இப்பிடி... செய்யும் திருட்டு தனத்துக்கு, பலப்பல பூச்சு..இதுக்கு, நம்ம மீடியா வால ஆட்டிக்கொண்டு செல்கிறது..பாவம் ஏழைகள்....... இந்த உலகம், பணம் பண்ணும், பணம் திருடும் , பணத்தை கொள்ளை அடிக்கும் உயிர்களுக்கானது... வடக்கதியானின் புண்ணியத்தால் , மோடி அவர்களால், இந்தியா என்ற பாவப்பட்ட பிராணி தப்பியது. இல்லையேல், வெளிநாட்டு (பைசர் தான் இவ்ளோ அயோக்யத்தனத்தையும் வெளிப்படையா செய்யும்.. மற்றவர்கள், மறைவாக செய்வார்கள் ) தடுப்பூசி போட வரிசையில் நின்று, மிதி பட்டே ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உயிர் இழந்திருப்பார்கள்... உயிர் பிழைத்து, இன்று இருநூறு ரூவாய்க்கு மோடி ஒழிக கோசம் போட்டு வாழகின்றன அந்த உயிரினங்கள் எல்லாம்...பெருமை கொள்வோம், திரு மோடி அவர்களின் தலைமைக்கு. இல்லையேல், சீனா அடிமையாக வாழ, கரப்பான் பூச்சி மசாலா, பூரான் ஃபிரை சாப்பிட்டு பழகுங்கள்...அடிமைகளுக்கு இதுவே அதிகம்தான்............
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
30-நவ-202108:38:35 IST Report Abuse
Sridhar அரசியலில் பலர் இந்த வைரஸ் இந்தியாவை தாக்காதா என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே ஒருவன் ட்வீட் போட்டு அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று துண்டு போட்டு வைத்திருக்கிறான். பின் வரும் நாட்களில் நான் அன்ரே சொன்னேன் னு மார்தட்டிக்கொள்வதற்கு இவன் ஏற்கனவே கொரோனா ஆரம்பகட்டத்தில் ஒரு ட்வீட் போட்டு வைத்திருந்தவன். இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று மக்களுக்கு ஆக்கபூர்வமாக ஒருமுறை கூட அறிக்கை கொடுக்காதவன். இந்த மாதிரியான அரசியல்வாதிகளையும், மக்களுக்கு பீதி ஏற்றும் வகையில் அரைகுறை அறிவோடு செய்தி வெளியிடும் சில பத்திரிகைகளையும் பார்க்கும்போது, மிகவும் வேதனையாக இருக்கிறது.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-நவ-202106:12:57 IST Report Abuse
Kasimani Baskaran தென்னாப்பிரிக்கா தகவல் தெரிவித்த உடனேயே அதற்கு சீன அதிபரின் பெயர் கொடுத்து விஞ்ஞான ஆய்வு இல்லாமல் வகைப்படுத்தியது ஓவரானது. இன்னும் ஓரிரண்டு வாரத்தில் வைரசை டிஎன்ஏவை வரிசைப்படுத்தி அதன் விபரங்கள் வந்தபின்னர்தான் இதன் தீவிரம் தெரியும். ஏழை ஆப்பிரிக்க நாடுகளை கொள்ளையடிக்க எடுக்கப்படும் முயற்சியாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. ஆப்பிரிக்காவுக்கு தேவையான தடுப்பு மருந்தை முழுவதும் இலவசமாக கொடுக்கிறேன் என்று இந்தியா ஒரு அறிவிப்பை வெளியிட்டால் போதும் உடனே இது சாதாரண தும்மலை வரவழைக்கும் வைரஸ் என்று உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுவிடும். உலக சுகாதார அமைப்பை இன்று சீனாதான் கட்டுப்படுத்துகிறது.
Rate this:
Bairav Kumar - Chennai,இந்தியா
30-நவ-202107:29:23 IST Report Abuse
Bairav Kumarநீங்கள் கூறுவது 100 சதவிகிதம் உண்மை. இது பைசர் போன்ற பன்னாட்டு மருந்து மாபியாக்களின் காசு பார்க்கும் வேலை. மீடியாக்களும் மாபியாக்கள் போடும் பிஸ்கட் க்கு தாளம் போட்டு மக்களை பீதி ஏற்றி கொண்டுள்ளது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X