பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு காய்ச்சல்: தமிழகத்தில் 600 பேர் பாதிப்பு

Added : நவ 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ''தமிழகத்தில் மழையின் போது, டெங்கு காய்ச்சலால் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் இதுவரை, வெவ்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அடிப்படையில், 6,714 பேரின் வைரஸ் தன்மை குறித்து, மரபணு பகுப்பாய்வு பரிசோதனை நடந்தது.


சென்னை : ''தமிழகத்தில் மழையின் போது, டெங்கு காய்ச்சலால் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.



latest tamil news



சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் இதுவரை, வெவ்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அடிப்படையில், 6,714 பேரின் வைரஸ் தன்மை குறித்து, மரபணு பகுப்பாய்வு பரிசோதனை நடந்தது. இதில், 4,618 முடிவுகளில் 96 சதவீதம் டெல்டா வகை வைரஸ் என்பது உறுதியானது.

தென்ஆப்பிரிக்கா நாட்டில், ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட உடன், தமிழகத்தில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறோம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை சர்வதேச விமான நிலையங்களில், வெளிநாட்டு பயணிகளை கண்காணிக்க உதவி திட்ட மேலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மழை காலத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால், 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



டெங்கு காய்ச்சல் பரவல் இருக்கத்தான் செய்கிறது. தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.'மினி கிளினிக்குகள் பயன்பாட்டில் இல்லை'தலைமை செயலகத்தில், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சி துணை தலைவர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடுகிறார்.

அ.திமு.க., ஆட்சியில், 1,820 அம்மா மினி கிளினிக்குகள் துவக்கப்பட்டு, டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர்; நர்ஸ்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது, மாநிலம் முழுதும் அம்மா மினி கிளினிக்குகள் பயன்பாட்டில் இல்லை. அதற்கு பதிலாக, மக்களை தேடி மருத்துவ திட்டம் தான் செயல்படுத்தப்படுகிறது.

மினி கிளினிக்கில் பணியாற்றியவர்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஓமந்துாரார் தோட்டத்தில் இருந்த தலைமை செயலகத்தை, மருத்துவமனையாக அ.தி.மு.க., அரசு மாற்றியது.அந்த கட்டடத்தில், 25 சதவீதம் மட்டும் தான் பயன்பாட்டில் உள்ளது.

தி.மு.க., அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை மாற்றி, கிடப்பில் போட்டு, அ.தி.மு.க., அரசு தான் பழிவாங்கியது. அ.தி.மு.க.,வினர் தங்களுக்குள் இருக்கும் பிரச்னையை முடித்து கொண்டு, ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
30-நவ-202108:56:44 IST Report Abuse
Sampath Kumar சென்னையில் மட்டமா சார் கொஞ்சம் தமிழ் நாடு முழுக்கு வந்து பாருங்க லாசத்தை தொடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X