சவுதிக்கு செல்ல தடை இல்லை; நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021
Share
Advertisement
கொச்சி : இந்திய பயணியருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சவுதி அரேபிய அரசு வாபஸ் பெற்று விட்டதாக, கேரள உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ஒருவர், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் 'வெல்டராக' பணிபுரிந்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக 2020ல் நாடு திரும்பினார். மீண்டும் வேலைக்கு செல்வதற்காக, 'கோவாக்சின்' தடுப்பூசி இரண்டு
Saudi Arabia, travel ban, India, withdrawn, Centre, Kerala High Court

கொச்சி : இந்திய பயணியருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சவுதி அரேபிய அரசு வாபஸ் பெற்று விட்டதாக, கேரள உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ஒருவர், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் 'வெல்டராக' பணிபுரிந்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக 2020ல் நாடு திரும்பினார். மீண்டும் வேலைக்கு செல்வதற்காக, 'கோவாக்சின்' தடுப்பூசி இரண்டு டோஸ்களும் செலுத்திக் கொண்டார். ஆனால், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறப்படாத கோவாக்சின் தடுப்பூசியை, சவுதி அரேபிய அரசு ஏற்கவில்லை.


latest tamil news


இதையடுத்து, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள 'கோவிஷீல்டு' தடுப்பூசியை மூன்றாவது டோஸாக தனக்குச் செலுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதி குன்ஹி கிருஷ்ணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகி, 'இந்திய பயணியர் வருவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை சவுதி அரேபிய அரசு வாபஸ் பெற்று விட்டது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்' என்றார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X