பொது செய்தி

இந்தியா

அரசின் சுகாதார செலவினம் 5.12 சதவீதமாக அதிகரிப்பு

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021
Share
Advertisement
புதுடில்லி : மத்திய அரசு சார்பில் சுகாதார துறைக்கு செய்யப்பட்ட செலவினம் கடந்த நான்கு ஆண்டுகளில், 3.78 சதவீதத்தில் இருந்து 5.12 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, தேசிய சுகாதார கணக்கு மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தேசிய சுகாதார செயலாக்க வளமை அமைப்பான, என்.எச்.எஸ்.ஆர்.சி., 2017 - 18ம் நிதியாண்டிற்கான தேசிய சுகாதார கணக்கு மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து உள்ளது. மத்திய
share, Health expenditure, GDP

புதுடில்லி : மத்திய அரசு சார்பில் சுகாதார துறைக்கு செய்யப்பட்ட செலவினம் கடந்த நான்கு ஆண்டுகளில், 3.78 சதவீதத்தில் இருந்து 5.12 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, தேசிய சுகாதார கணக்கு மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய சுகாதார செயலாக்க வளமை அமைப்பான, என்.எச்.எஸ்.ஆர்.சி., 2017 - 18ம் நிதியாண்டிற்கான தேசிய சுகாதார கணக்கு மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து உள்ளது. மத்திய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷண் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2017 - 18ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதார துறையின் பங்களிப்பு 1.35 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இது, 2013 - 14ம் நிதியாண்டில் 1.15 சதவீதமாக குறைந்து இருந்தது. இதே காலத்தில் மத்திய அரசின் செலவினத்தில் சுகாதார துறைக்கான செலவினம் 3.78 சதவீதத்தில் இருந்து 5.12 சதவீதமாக உயர்ந்து உள்ளது.


latest tamil news



இதே காலத்தில் மத்திய அரசின் தனி நபருக்கான சுகாதார செலவினம் 1,042 ரூபாயில் இருந்து 1,753 ரூபாயாக அதிகரித்து உள்ளது. சமூக சுகாதார காப்பீட்டு திட்டம், அரசு நிதியுதவி சார்ந்த சுகாதார காப்பீட்டு திட்டம், அரசு ஊழியர் மருத்துவ செலவினம் உட்பட மத்திய அரசின் ஒட்டுமொத்த சுகாதார செலவினங்கள் அதிகரித்துள்ளன.

மதிப்பீட்டு காலத்தில் சுகாதார துறைக்கான வெளிநாட்டு நிதியுதவி 0.5 சதவீதமாக குறைந்து உள்ளது. இது, இந்திய பொருளாதாரம் சுயசார்புமிக்கதாக மாறி வருவதை எடுத்துக் காட்டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X