2021ம் ஆண்டிற்கான வார்த்தையாக 'தடுப்பூசி' தேர்வு

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன் : இந்த ஆண்டிற்கான வார்த்தையாக, 'தடுப்பூசி' என்ற வார்த்தையை, 'மெரியம் வெப்ஸ்டர்' நிறுவனம் தேர்வு செய்து உள்ளது.அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக வைத்து இயங்கும் மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம் 'டிக்ஷனரி' எனப்படும் அகராதிகளுக்கு பெயர்பெற்றது. இந்த நிறுவனம் ஆண்டுதோறும் ஒரு வார்த்தையை தேர்வு செய்து, சிறந்த வார்த்தையாக அறிவித்து வருகிறது.
Vaccine, Merriam Webster,2021, word of the year

வாஷிங்டன் : இந்த ஆண்டிற்கான வார்த்தையாக, 'தடுப்பூசி' என்ற வார்த்தையை, 'மெரியம் வெப்ஸ்டர்' நிறுவனம் தேர்வு செய்து உள்ளது.

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாகாணத்தை தலைமையிடமாக வைத்து இயங்கும் மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம் 'டிக்ஷனரி' எனப்படும் அகராதிகளுக்கு பெயர்பெற்றது. இந்த நிறுவனம் ஆண்டுதோறும் ஒரு வார்த்தையை தேர்வு செய்து, சிறந்த வார்த்தையாக அறிவித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு 'பேண்டமிக்' எனப்படும் பெருந்தொற்றை குறிப்பிடும் வார்த்தை தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான வார்த்தை தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.'வேக்சின்' எனப்படும் தடுப்பூசியை குறிப்பிடும் வார்த்தையை மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.


latest tamil news



இதுகுறித்து, மெரியம் வெப்ஸ்டர் நிறுவன ஆசிரியர் பீட்டர் சோகோலோஸ்கி கூறியதாவது: இந்த ஆண்டில் தடுப்பூசி என்ற வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த ஆண்டின் வார்த்தையாக அது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்த்தையில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, அறிவியல் சார்ந்தது. விரைந்து தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்ட விஷயம் அது.இரண்டாவது, தடுப்பூசி கொள்கை மற்றும் அதை வைத்து நடக்கும் அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
30-நவ-202108:43:10 IST Report Abuse
Bala Murugan அடுத்த வருடத்திற்கான வார்த்தை இப்போதே கண்டுபிடிப்பு - ஓமைக்ரான். சென்ற வருடத்திற்கும் இந்த வருடத்திற்குமான வார்த்தை இணையவழிக்கல்வி, இந்த வருடத்திற்கான இன்னொரு வார்த்தை ஆசிரியர் பாலியல் தொல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X