பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி போடும் பணி எந்த மாநிலத்தில் மந்தம்?

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்களை காட்டிலும், காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மந்தமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணியை அரசியலாக்க முயற்சிப்பதாக பா.ஜ., தரப்பில் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
Vaccine, Corona Vaccine, India Fights Corona

புதுடில்லி : பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்களை காட்டிலும், காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மந்தமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணியை அரசியலாக்க முயற்சிப்பதாக பா.ஜ., தரப்பில் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில மாநிலங்களின் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி விகிதங்கள் குறித்து நேற்று தகவல் வெளியிடப்பட்டது.

அதன் விபரம்: தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 78.1 சதவீதமாகவும், இரண்டாவது டோஸ் செலுத்தியோர் 42.65 சதவீதமாகவும் உள்ளது. ௦இது, மஹாராஷ்டிராவில் 80.11 மற்றும் 42.5 ஆகவும், சத்தீஸ்கரில் 83.2 மற்றும் 47.2 ஆக உள்ளது.


latest tamil news


ராஜஸ்தானில் 84.2 சதவீதம் பேர் முதல் டோசும், 46.9 சதவீதம் பேர் இரண்டவாது டோசும் செலுத்தி உள்ளனர். இது மேற்கு வங்கத்தில் 86.6 மற்றும் 39.4 சதவீதமாக உள்ளன. இந்த மாநிலங்களில் காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், திரிணமுல் காங்., ஆட்சியில் உள்ளன.

பா.ஜ., ஆட்சியில் உள்ள எட்டு மாநிலங்களில் 50 சதவீதம் மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. ஏழு மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியில் பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்களில் காட்டப்படும் முனைப்பு மற்ற மாநிலங்களில் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
30-நவ-202113:39:26 IST Report Abuse
raja இங்கதான் சுகாதார துறையில மாசு பூந்திடுச்சே.....
Rate this:
Cancel
Krish - Salem,இந்தியா
30-நவ-202113:22:53 IST Report Abuse
Krish அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி
Rate this:
Cancel
Raghavan Chandru - DAMMAM,சவுதி அரேபியா
30-நவ-202112:11:56 IST Report Abuse
Raghavan Chandru கேரளாவில் 95% முதல் டோஸ் போடப்பட்டுள்ளது…
Rate this:
sankar - Nellai,இந்தியா
30-நவ-202113:07:27 IST Report Abuse
sankarகணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X