பொது செய்தி

இந்தியா

'வெல்க தளபதி... வெல்க அண்ணன் உதயநிதி'; பதவியேற்பின் போது கோஷமிட்ட திமுக., எம்.பி.,க்கு கண்டிப்பு

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (107)
Share
Advertisement
புதுடில்லி : ராஜ்யசபாவில் நேற்று பதவியேற்ற தி.மு.க., - எம்.பி., ராஜேஷ் குமார், உறுதிமொழி ஏற்பின் போது கோஷமிட்டதை, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு கண்டித்தார்.அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தனர். இருவரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். அந்தப்
DMK, Rajeshkumar MP, Rajya Sabha

புதுடில்லி : ராஜ்யசபாவில் நேற்று பதவியேற்ற தி.மு.க., - எம்.பி., ராஜேஷ் குமார், உறுதிமொழி ஏற்பின் போது கோஷமிட்டதை, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு கண்டித்தார்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தனர். இருவரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். அந்தப் பதவிகளுக்கு, தி.மு.க., சார்பில் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதேபோல் அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., முகமது ஜான் உடல்நலக் குறைவால் மார்ச் 23-ல் காலமானார். அந்த காலியிடத்துக்கான தேர்தலில், தி.மு.க.,வை சேர்ந்த அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியதும், புதிய எம்.பி.,க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.


latest tamil news


ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில், தமிழகத்தில் இருந்து தேர்வான தி.மு.க.,வைச் சேர்ந்த அப்துல்லா, ராஜேஷ் குமார், கனிமொழி சோமு மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து தேர்வான காங்.,கைச் சேர்ந்த ரஜினி அசோக்ராவ் பாட்டீல் ஆகியோர் பதவியேற்றனர். தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜேஷ் குமார் உறுதிமொழி வாசித்து முடித்த பின், 'வெல்க தளபதி... வெல்க அண்ணன் உதயநிதி' என கோஷமிட்டார்.

உடனடியாக குறுக்கிட்ட வெங்கையா நாயுடு, “கோஷம் சபைக்குறிப்பில் சேர்க்கப்படாது. சபைக்கு வெளியில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம்,” என, கண்டித்தார். நேற்று மூன்று எம்.பி.,க்கள் பதவியேற்றதை அடுத்து, ராஜ்யசபாவில் தி.மு.க.,வின் பலம் 10 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Chennai,இந்தியா
30-நவ-202120:17:58 IST Report Abuse
Rajagopal கர்ர்ர்...த்தூ..
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
30-நவ-202119:12:07 IST Report Abuse
Girija பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று சும்மாவா சொன்னார்கள்? இனி மேல் எம் பி களையும் மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சட்டம் வரவேண்டும். அப்பொழுதான் தகுதியானவர்கள் மேல் சபைக்கு செல்வர். ஆதார் மூலம் ஓட்டெடுப்பு மென்பொருள் உதவியுடன் நடத்த வேண்டும். தபால் ஓட்டுக்களை ஒழித்துவிடலாம். எங்கிருந்து வேண்டுமானாலும் ஒட்டு பதிவு செய்ய்ய முடியும் யாருக்கு வேண்டுமானாலும் பதிவு செய்ய வாய்ப்பு ஏற்படுத்த முடியும். இதனால் ஓட்டு போட சொந்த ஊர் செல்லும் அனாவசிய பயணங்கள் தவிர்க்க படும் நாடு முழுக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் எம் பி க்களை மக்களே தேர்ந்தெடுக்க முடியும் . குதிரை பேரம் ஒழியும். .
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
30-நவ-202118:15:09 IST Report Abuse
sankar அங்கே அனுப்பாதீங்க உபி-ஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X