பொது செய்தி

இந்தியா

திருமண பரிசாக பெட்ரோல் இந்தியன் ஆயில் அறிவிப்பு

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : 'மணமக்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான எரிபொருள் கூப்பன்களை பரிசாக வழங்குங்கள்' என, இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் 'ஒன் பார் யு' என, அழைக்கப்படும் பரிசு திட்டம் தீபாவளிக்கு அறிமுகமானது.இதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பிக்கொள்ளும் எரிபொருள் கூப்பனை, நண்பர்களுக்கு தீபாவளி
Indian Oil, efuel vouchers, wedding gifts

புதுடில்லி : 'மணமக்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான எரிபொருள் கூப்பன்களை பரிசாக வழங்குங்கள்' என, இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் 'ஒன் பார் யு' என, அழைக்கப்படும் பரிசு திட்டம் தீபாவளிக்கு அறிமுகமானது.இதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பிக்கொள்ளும் எரிபொருள் கூப்பனை, நண்பர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கும் முறை துவங்கியது. இந்த கூப்பன், குறைந்தபட்சம் 500 முதல், அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது.

இத்திட்டம் மக்களிடம் முழுமையாக சென்றடைய தற்போது புதிய வழிகாட்டுதலை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்படி உறவினர் மற்றும் நண்பர்கள் திருமணத்திற்கு பரிசளிக்க விரும்புவோர், கூப்பன்களை வழங்கலாம். அதனை பயன்படுத்தி, அவர்கள் பெட்ரோல் அல்லது டீசலை பெறலாம்.


latest tamil newsஇதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் சமூக வலைதளத்தில் கூறி உள்ளதாவது: உங்கள் அன்புக்குரியவர்களின் புதிய துவக்கங்களை மிக சிறப்பானதாக மாற்றுங்கள். திருமணங்களை கொண்டாட சிறந்த பரிசாக இந்தியன் ஆயில் நிறுவன எரிபொருள் கூப்பன் உள்ளது.அவற்றை 'ஆன்லைன்' வாயிலாக பெற்று உங்கள் அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் அனைவருக்கும் பரிசளியுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
30-நவ-202118:39:50 IST Report Abuse
Girija வேலையத்தவன் எதையோ செய்தமாதிரி உள்ளது இது. முதலில் பெட்ரோலுக்கு விளம்பரம் அவசியமா? பெட்ரோல் விற்கவில்லை என்ற நிலை உள்ளதா? அதுதான் வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணையை வாங்கி குவிக்கிறோமே ? இப்படி கூப்பன் கொடுப்பதால் அது பெட்ரோல் உபயோகத்தை அதிகரிக்கும் . இதுதான் இந்த நிறுவனத்தின் இந்திய பொருளாதாரத்தின் மீதான அக்கறையா? அல்லது புவி வெப்பமடையதலை ஊக்குவிக்கும் நடவைக்கையா ? . பெட்ரோல் மற்றும் காஸ் உற்பத்தி விலையை குறைக்கும் முயற்சி மட்டும் தான் அவர்கள் கடமை. இதே போல் ஸ்டேட் பேங்க் க்ரெடிட் கார்டு விளம்பரம் அனுஷ்கா சர்மாவை வைத்து . இது தேவையா ? இதற்க்கு பதில் வாடிக்கையாளர் சேவை கட்டணங்களை குறைத்திருக்கலாமே ? வீட்டு கடன் ஈ எம் ஐ தவணையை 30 நாட்கள் என்பதை 32 நாட்கள் என்று குறைந்தபட்சம் கோரோனோ காலத்தில் மக்களுக்கு சலுகை அளித்திருக்கலாமே?. நாடு நன்றக இருந்த காலத்தில், அமெரிக்க அறிஞர் ரகுராம் ராஜன் கவர்னராக இருந்தபோது , வீட்டு கடன் வட்டியை 8.5% இருந்து 10.5% சதவிகிதம்மாக்கி ,குறைக்கவே முடியாது என்று முகம் சுளித்தார். ஆனால் இப்போது தலைகீழ். வீட்டு கடன் வட்டி பாதியாக குறைந்தஉள்ளது , வங்கிகள் போட்டி போட்டு கொண்டு 6.5% விகிதத்தில் வீட்டு கடன் கொடுக்கிறது. இத்தனைக்கும் ஜி டி பி மிகவும் கீழே சென்றுவிட்டது . இது எப்படி சாத்தியம் ? எனக்கு ஒன்றும் புரியவில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் எந்த ஒரு விளம்பரமும் செய்ய்யக்கூடாது என்று அவசர சட்டம் வரவேண்டும் .இல்லாவிட்டால் நாளைக்கு ரயில்வே, டாஸ்மாக், மின்வாரியம் என்று விளம்பரத்தில் இறங்கி காசு பார்ப்பர் .அதேபோல் இலவச காஸ் மின்சாரம் பஸ் பயணம் மெட்ரோ பயணம் போன்ற காலவரையற்ற தேர்தல் வாக்குறுதிகளை தடுக்க அவசர சட்ட திருத்தம் வரவேண்டும்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
30-நவ-202116:47:18 IST Report Abuse
DVRR இதைத்தான் "Business Marketing Strategy" என்பது . பேஷ் . அந்த கூப்பனில் பணத்திற்கு பதிலாக 1,2,3,4,5,6,78,9,10,15,30,40 லிட்டர் பெட்ரோல் என்று இருந்திருந்தால் விற்பனை அதிகமாகும் இந்த கூப்பன், அதாவது அதன் விலை குறைந்தாலும் கூடினாலும் கவலை இல்லை என்று பலர் வாங்கி வைத்துக்கொண்டால் கூட ஆச்சரியமில்லை.
Rate this:
Cancel
selva - Chennai,இந்தியா
30-நவ-202113:32:29 IST Report Abuse
selva எல்லாம் .. அவன் செயல்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X