குருத்வாராவில் படம் பிடித்த பாக். அழகியால் சர்ச்சை

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : பாகிஸ்தானின் கர்தார்பூர் சாகிப் குருத்வாராவில் மாடல் அழகி ஒருவர் தன் உடைகளை விளம்பரம் செய்ய புகைப்படம் எடுத்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சீக்கியர்களின் புனித இடமான கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைந்துள்ளது. இங்கு இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில்
Pakistani Model, Controversy, Gurdwara

புதுடில்லி : பாகிஸ்தானின் கர்தார்பூர் சாகிப் குருத்வாராவில் மாடல் அழகி ஒருவர் தன் உடைகளை விளம்பரம் செய்ய புகைப்படம் எடுத்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சீக்கியர்களின் புனித இடமான கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைந்துள்ளது. இங்கு இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் இங்கு பாக். மாடல் அழகி ஒருவர் உடைகளை விளம்பரம் செய்ய புகைப்படம் எடுத்துள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

குருத்வாராவுக்குள் நுழையும் பெண்கள் துணியால் தலையை மறைத்துக் கொள்ள வேண்டும் என்பது மரபு. அதையும் மீறி அவர் தலைமுடி தெரியும்படி 'போஸ்' கொடுத்து அங்கு புகைப்படங்களை எடுத்துள்ளார். அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில் அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும் டில்லியில் உள்ள சீக்கிய குருத்வாராக்களை நிர்வகிக்கும் குழுவின் தலைவருமான மன்ஜிந்தர் சிங் சிர்சா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


latest tamil news



அவர் நேற்று கூறியதாவது: குருநானக் தேவின் புனித இடத்தில் பெண் ஒருவர் அநாகரிகமாக நடந்துள்ளார். பாக்கில் உள்ள இஸ்லாமிய மதம் சார்ந்த இடத்தில் அவரால் இவ்வாறு நடந்துக் கொள்ள முடியுமா? அவருக்கு அந்த துணிச்சல் உள்ளதா? கர்தார்பூர் சாகிப் குருத்வாராவை ஒரு சுற்றுலா இடமாக மக்கள் பயன்படுத்துவதை நிறுத்த பிரதமர் இம்ரான் கான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
30-நவ-202114:04:12 IST Report Abuse
Samathuvan சீக்கியர்களை பின்பு மதம் மாறச்சொல்லலாம், முதலில் ஹிந்து என்பவர்கள் யார் யார் மற்றும் எந்தெந்த ஜாதிகள் அடங்கும் என்பது போன்ற தெளிவான விளக்கம் தேவை. அதில் தான் குழப்பமே.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
30-நவ-202112:53:41 IST Report Abuse
jayvee இது வெறும் மத அரசியல்.. பஞ்சாபிகள். மது மாது போதை என்று அனைத்தும் தாராளமாக கிடைக்கும் பஞ்சாபில் இது வெறும் அரசியல் நாடகமே
Rate this:
Cancel
30-நவ-202111:18:51 IST Report Abuse
ஆரூர் ரங் சீக்கியர்களும் மாற வேண்டும். ஹிந்து மக்களை முகமதிய அரசு அராஜகத்திலிருந்து காப்பாற்ற👍 உருவான பிரிவு தன்னை தனி மதமாக கருதுவதே தவறு. போதாதற்கு வழிபாட்டுத் தலங்கள் புனித நூல்🙏 போன்றவற்றுக்கு சாஹிப் எனும் அரபி பெயர், அரபி முறையில் தலையை மறைப்பு போன்ற சம்பிரதாயம் எதற்கு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X