கூட்டணி கட்சியிடம் பணம் வாங்கக் கூடாது.. எதிர்த்து சத்தமாக குரல் கூட கொடுக்க முடியவில்லையே!

Updated : நவ 30, 2021 | Added : நவ 30, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நேரு, எங்கள் கட்சி எம்.பி., வெங்கடேசனை ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரிகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவர்.இதற்குத் தான் கூட்டணி கட்சியிடம் பணம் வாங்கக் கூடாது என்பது...
கே.பாலகிருஷ்ணன், அருணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நேரு, எங்கள் கட்சி எம்.பி., வெங்கடேசனை ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரிகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவர்.


இதற்குத் தான் கூட்டணி கட்சியிடம் பணம் வாங்கக் கூடாது என்பது... இப்போது பாருங்கள், எதிர்த்து சத்தமாக குரல் கூட கொடுக்க முடியவில்லையே!பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை: சென்னை மாநகரம் ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக மிதக்கிறது. நகரின் அனைத்து பகுதிகளிலும் தேங்கியுள்ள தண்ணீரை விரைவாக வெளியேற்றுவதற்கு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடும்பத்திற்கு தலா 5,000 ரூபாய் நிதிஉதவி வழங்க வேண்டும்.


கூச்சப்படாமல், பிற மாநிலங்களில் இருந்து கனரக இயந்திரங்களை கேட்டு வாங்கி, துணை ராணுவப்படையினரை பணியில் ஈடுபடுத்தினால் மட்டுமே சென்னை மாமூல் நிலையை அடையும்; அந்த அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது!தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: 'ஹிந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை. இந்தியா இல்லாமல் ஹிந்துக்கள் இல்லை' என்கிறார், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத். பிற மதத்தவருக்கு இந்தியா சொந்தம் இல்லையாம்... பிற நாடுகளில் வாழும் இந்தியர் ஹிந்துக்கள் இல்லையாம்; எவ்வளவு குறுகிய புத்தி!


latest tamil news
உங்களுக்குத் தான் குறுகிய புத்தி. 'இந்தியா என்றாலே இந்திரா தான்' என முழங்கிய காங்.,குடன் கூட்டணி வைத்து, தி.மு.க.,விடம் நிதி பெற்று, சொந்த கொள்கைகளை விற்று, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்ட கொள்கை உடைய கம்யூ.,க்கள், ஆர்.எஸ்.எஸ்., தலைவரை குற்றம்சாட்டக் கூடாது என்கின்றனர் உங்களின் அன்பு, 'சங்பரிவார்' மக்கள்.விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை
: அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகளை முன்விடுதலை செய்ய அரசு முடிவு செய்திருப்பதை வரவேற்கிறோம். இதற்கு தண்டனை மற்றும் காலம் ஆகியவற்றுடன் மதத்தையும் அளவுகோலாக அறிவித்திருப்பது, இஸ்லாமியரின் விடுதலைக்கு எதிராக அமைந்துள்ளது. அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


நீங்கள் சொல்வதைப் பார்த்தால், எந்த அளவுகோலும் இருக்கக் கூடாது. அவர் பிறந்த நாளில் அனைவரையும் அவிழ்த்து விட்டு விட வேண்டும் என்கிறீர்கள். நாடு என்னாவது?


Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
30-நவ-202119:40:59 IST Report Abuse
r.sundaram அவர்கள் திரும்பவும் குண்டு வைத்தால் இவர் பொறுப்பு ஏற்பாரா? இல்லை அவர்களுக்கு பதில் இவர் உள்ளே போவாரா? தூக்கு தண்டனை கிடைத்தால் ஏற்பாரா?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
30-நவ-202118:57:16 IST Report Abuse
Bhaskaran அப்பழுக்கற்ற சுந்தரய்யா ராமமூர்த்தி தங்கமணி காலத்து கம்ம்யூனிஸ்ட் அல்லவே இப்போது இருப்பது சுகவாழ்க்கை கரார்த்து தம்பேஹியினர் yechuri kal ulla katchi scram போன தலைவர்கள் உள்ள கட்சி இப்போது இருக்கும் kammunist
Rate this:
Cancel
raman - madurai ,இந்தியா
30-நவ-202118:41:01 IST Report Abuse
raman கம்யூனிஸ்டுகள் 25 கோடி பெற்றபின் தொழிலாளர் நலன் பற்றி வாய் திறக்க முடியுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X