அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாநில காங்., தலைவர் பதவி கனவு : எம்.பி., ஜோதிமணியின் தொடரும் 'காமெடி' போராட்டம்

Added : நவ 30, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
கரூர் : மாநில தலைவர் பதவிக்காக தொடர்ந்து காமெடி போராட்டத்தில், கரூர் காங்.,-எம்.பி., ஜோதிமணி ஈடுபட்டு வருவது காங்., தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.கரூர் லோக்சபா தொகுதி காங்.,- எம்.பி., ஜோதிமணி. இவர், 2011ல் கரூர் சட்டசபை, 2014ல் கரூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2019ல், தி.மு.க., கூட்டணியில் கரூர் எம்.பி.,யாக வெற்றி பெற்றார். அதுமுதல், தி.மு.க., நடத்திய
Congress,காங்கிரஸ்

கரூர் : மாநில தலைவர் பதவிக்காக தொடர்ந்து காமெடி போராட்டத்தில், கரூர் காங்.,-எம்.பி., ஜோதிமணி ஈடுபட்டு வருவது காங்., தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கரூர் லோக்சபா தொகுதி காங்.,- எம்.பி., ஜோதிமணி. இவர், 2011ல் கரூர் சட்டசபை, 2014ல் கரூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2019ல், தி.மு.க., கூட்டணியில் கரூர் எம்.பி.,யாக வெற்றி பெற்றார். அதுமுதல், தி.மு.க., நடத்திய ஆர்ப்பாட்டம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து, தி.மு.க., பெயரை கேட்டாலே தக்காளி போல் முகம் காட்டும் ஜோதிமணி, தி.மு.க., நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். இது மட்டுமல்லாமல், 'காங்., தலைமையின் கவனம் தன் மீது திரும்ப வேண்டும்' என, அடிக்கடி காமெடி போராட்டங்கள் நடத்துகிறார்' என, உள்ளூர் காங்கிரசார் புலம்புகின்றனர்.

கடந்த, 2016ல் அரவக்குறிச்சியில், தி.மு.க., சார்பில் கே.சி.,பழனிசாமி போட்டியிடுவது உறுதி என்ற நிலையில், காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்க வேண்டும் என, சமூக வலைத்தளத்தில் ஜோதிமணி யுத்தம் நடத்தினார். அப்போதைய, காங்., மாநில தலைவர் இளங்கோவன் எச்சரிக்கைக்குப் பின் அமைதியானார்.

2019ல் எம்.பி., யாக வெற்றி பெற்ற பின், 2019 ஆகஸ்ட், 10ல் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த கோரி, கரூர் நகராட்சி கமிஷனர் அறையில் ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கடைசியாக, 'கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார்' என்று கூறி, போராட்டத்தை விலக்கி கொண்டார்.

உள்ளிருப்பு போராட்டம்
கடந்த, பிப்.,20ல், 'கரூர் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானாவில் காந்தியின் பழைய சிலையை மீண்டும் வைக்க வேண்டும்; கட்டுமானம் சரியில்லை' எனக்கூறி, தர்ணா நடத்தினார். அவரின், 'நாடக' போராட்டத்தை காங்கிரசார் புறக்கணித்ததால், தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்களை இரவல் வாங்கியே போராட்டம் நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். போராட்டத்தின் போது போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி சென்றதால், சமூக வலைதளங்களில் தன் வீடியோவை வெளியிட்டு ஆறுதல் தேடிக்கொண்டார்.

தற்போது, காங்., கட்சியின் கூட்டணி கட்சியான, தி.மு.க., ஆட்சி நடந்தாலும், ஜோதிமணியின் காமெடி தர்பார் குறைந்தபாடில்லை. கடந்த, 24ல், 'மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம் நடத்த கரூர் கலெக்டர் பிரபுசங்கர் அனுமதி மறுக்கிறார்' என தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

24 மணி நேரம் நடத்திய போராட்டத்தை உள்ளூர் அமைச்சர் மட்டுமல்லாது, காங்., தலைமை கூட கண்டு கொண்டதாக தெரியவில்லை.இதனால், 'தமிழகத்தின் சீனியர் மந்திரிகள் தன்னை தொடர்பு கொண்டு பேசினர்' என, கூறி போராட்டத்தை விலக்கி கொண்டார். இவர் நடத்திய எந்த போராட்டத்திலும் இறுதி முடிவு கிடைத்ததே இல்லை.

புலம்பும் பிரமுகர்கள்
உள்ளூரில் அடிப்படை பிரச்னைகளுக்காக மக்கள் போராட்டம் நடத்தும் போது, 'உள்ளூர் எம்.பி., ஜோதிமணியை காணவில்லை; ஜோதிமணியை கண்டு பிடித்து தாருங்கள்' என கோஷம் எழுப்புவது இன்று வரை தொடர்கிறது. இதை மறைப்பதற்காக அவ்வப்போது போராட்டம், உள்ளிருப்பு போராட்டம் நடத்தி, தன்னை முன்னிலைப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஜோதிமணி.

ஆனால், தற்போது மாநில காங்., தலைவர் பதவியை பிடிக்க, தலைமையின் கவனத்தை ஈர்க்கவும், தன்னை முன்னிலைப்படுத்தவும் போராட்டங்களை நடத்தி வருகிறார். இதுபோன்ற போராட்டங்கள், தி.மு.க., தரப்பில் எரிச்சலையும், காங்., தரப்பில் தர்மசங்கடத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

காங்., இளம் தலைவர் ராகுல், தனக்கு நல்ல பரீட்சியம் எனக்கூறி வரும் ஜோதிமணி, மாநில தலைமைக்கு ஏதாவது ஒரு வகையில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், 'காமெடி' போராட்டங்களை நடத்துவது வாடிக்கையாகி விட்டது என புலம்புகின்றனர் உள்ளூர், காங்., பிரமுகர்கள்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
30-நவ-202123:49:50 IST Report Abuse
tata sumo why this six girls sitting and watching her, can also sleep together right ,the carpet was very big.
Rate this:
Cancel
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
30-நவ-202123:44:43 IST Report Abuse
tata sumo friends can any one clear my doubt,on what type thing she is sleeping, is it a carpet or samiyana tent ?
Rate this:
Cancel
30-நவ-202114:39:35 IST Report Abuse
ஆரூர் ரங் இப்போ ராகுலை விட சசி தரூர் தான்😛 அதிக பரீச்சையமாம்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
30-நவ-202118:06:49 IST Report Abuse
Girijaகேவலம் முன்னின்று நடத்தினால் ஆண்களுடன் இணைத்து பேசுவது? இதுபோல் திமுக பெயர்களை கூறி பாருங்கள்? பெயரே ராங் ஆகிவிடும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X